ஐரோப்பா

பிரித்தானிய முன்னணி சட்டக்கல்லூரி இணையத்தளம் மது சைபர் தாக்குதல் – கடும் நெருக்கடியில் மாணவர்கள்

  • August 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் BPP எனப்படும் முன்னணி முதுகலைப் பட்டதாரி சட்டக்கல்லூரி இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. பரீட்சைகள் நெருங்கி வரும் நிலையில் இந்த தாக்குதலால் மாணவர்களால் பாடப் பணிகளை அணுக முடியாமல் போய்விட்டது என செய்தி வெளியாகியுள்ளது. “எங்கள் பாடப் பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது அல்லது தடுக்கப்பட்டுள்ளது” என மாணவர் ஒருவர் தெரிவித்தார். தற்போது அனுபவித்து வரும் தகவல் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சேவை செயலிழப்பு பற்றிய விசாரணையைத் தொடர்ந்து, இணையத்தளம் அங்கீகரிக்கப்படாத […]

இலங்கை

திருகோணமலைக்கு விஜயம் செய்த கஞ்சர்

  • August 2, 2023
  • 0 Comments

இந்தியாவில் அதி நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கி இந்திய கடற்படைக் கப்பல் கஞ்சர், 2023 ஜூலை 29 முதல் 31ம் திகதி வரை திருகோணமலைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது. இவ்விஜயத்தின்போது குறித்த இந்திய கடற்படைக்கப்பலின் கட்டளைத் தளபதி NVS பஹ்னி குமார், கிழக்கு கடற் பிராந்திய தளபதியை சந்தித்தல் உள்ளிட்ட பல்வேறு இரு தரப்பு சந்திப்புகள் இடம்பெற்றது.VBSS மற்றும் ஏவுகணை இயக்குதல் அடிப்படையிலான நிபுணத்துவ மட்ட சந்திப்புகளும் ஏற்பாடு […]

ஐரோப்பா

37 ஆண்டுகளுக்கு பிறகு உறைந்த நிலையில் மீட்கப்பட்ட மலையேறுபவரின் உடல் எச்சங்கள்!

  • August 2, 2023
  • 0 Comments

37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலையேறுபவரின் எச்சங்கள் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸில் உள்ள மேட்டர்ஹார்ன் அருகே உள்ள பனிப்பாறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற மாதம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரை கடந்து சென்ற மலையேற்ற வீரர்கள் குழுவால் இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கண்டுப்பிடிக்கப்பட்ட உடற்பாகங்கள் DNA பரிசோதனைக்காக சியோனில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 1986ம் ஆண்டுகளில் மலையேறி காணமல் போன 38 வயதுடையவரின் உடற்பாகங்கள் என்பதை பரிசோதனை உறுதிசெய்துள்ளது.மேலும் காணாமல் போனவரின் ஹைகிங் […]

இலங்கை

அதலபாதாளத்தை நோக்கி செல்லும் இலங்கை : கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி!

  • August 2, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கம்  இறக்குமதித் தடைகளை நீக்கியதன் மூலம், உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கைக் கூட இலங்கைக்குள் இறக்குமதி செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் எனவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  ”ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்ட இறக்குமதி […]

இந்தியா

எம்.ஜி.ஆர் சிலை மீது சிவப்பு பெயிண்ட் பூசிய மர்ம நபர்கள்!

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் சிலை, புதன்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சிவப்பு பெயிண்ட் பூசி சேதப்படுத்தப்பட்டது. சிலை அமைந்துள்ள சென்னை ராயபுரம் அருகே காலிங்கராயன் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலை மீது, அடையாளம் தெரியாத நபர்கள், சிவப்பு சிற பெயின்டை பூசி அவமதிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக பகுதி செயலாளர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து […]

பொழுதுபோக்கு

பட்டையை கிளப்புகின்றது “ஜெய்லர்”…. சற்றுமுன் வெளியானது ட்ரெய்லர்

  • August 2, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியுள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Meet Tiger Muthuvel Pandian💥 The much-awaited #JailerShowcase is […]

இலங்கை

முட்புதரிலிருந்து ஆணின் சடலம் நிர்வாணமாக மீட்பு

  • August 2, 2023
  • 0 Comments

கடுவலை வெவபாறை பகுதியின் முட்புதரில் ஆண் ஒருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் 30 முதல் 40 வயதுடைய ஒருவருடையது என சந்தேகிக்கப்படுவதுடன் ,சடலத்தில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொள்வார்கள்.

இலங்கை

மலை உச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை எடுக்கச் சென்றவரும் பலி!

  • August 2, 2023
  • 0 Comments

கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை எடுக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர், காப்புக்காட்டுக்குள்ளேயே திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். நுவரெலியா மூன்றாம் சிங்கப் படையணியில் கடமையாற்றி வந்த அனுராதபுரத்தில் வசிக்கும் 36 வயதுடைய கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் காப்புக்காட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்குப் பின் வந்த இருவர், ராணுவ அதிகாரி ஒருவர் […]

பொழுதுபோக்கு

‘கங்குவா’ தயாரிப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

  • August 2, 2023
  • 0 Comments

‘கங்குவா, சூர்யா நடித்த மெகா பட்ஜெட் படங்களில் ஒன்றாகும், மேலும் இப்படம் 10 இந்திய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. சூர்யாவின் பிறந்தநாளின் போது படத்திலிருந்து முதல் பார்வை மற்றும் போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டது. சூர்யாவின் பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடியதை அடுத்து, படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். https://twitter.com/StudioGreen2/status/1686621650689957890  

இலங்கை

ஆழ்கடலில் தோண்டி எடுக்கப்படும் இரத்த மட்டி-அதிகளவில் விற்பனை

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா திருகோணமலை போன்ற கடற்பிரதேசங்களில் கடலுனவாக இரத்த மட்டி விற்பனையாகி வருகின்றது. திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடலில் உயிரை பனையம் வைத்து சுழியோடிகள இதனை தோண்டி எடுத்து வருகின்றனர். இரத்த மட்டி 15 அடிக்கும் 25 அடிக்கும் இடைப்பட்ட ஆழ்கடலில் இருப்பதாகவும் சுழியோடியான ஆறுமுகதாஸ் லுஜீவன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!