பொழுதுபோக்கு

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பார்க்க விடுமுறை அறிவித்த தனியார் நிறுவனம்

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று ‘ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10ம் திகதி விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் […]

ஐரோப்பா

ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது!

  • August 5, 2023
  • 0 Comments

கெர்ச் பாலம் அருகே ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய பாதுகாப்பு சேவை, “வெற்றிகரமான சிறப்பு நடவடிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் இருந்து 17 மைல் தொலைவில் உள்ள இரசாயன டேங்கர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே இரவில் தாக்கப்பட்ட டேங்கர் “ரஷ்ய கூட்டமைப்பின் மிகவும் சக்திவாய்ந்த எண்ணெய் டேங்கர்களில் ஒன்று” என்று கூறப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ஜப்பானில் விடுமுறையை கழிக்கும் காயத்ரி… நீச்சல் உடையில் சூப்பர் படங்கள்….

  • August 5, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். மேலும் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பும் பேசும் படியாக இருந்தது. இவருக்கு […]

இலங்கை

குப்பைகளை எரிக்க சென்ற வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பொல்பிதிகம நாகொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். கலபிடமட, பொல்பதிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டு குப்பைகளை எரித்து கொண்டிருந்த போது அருகில் இருந்த மரம் ஒன்றில் தீ பரவியுள்ளதை தொடர்ந்து குறித்த தீயை அணைக்க முயன்றுள்ளார் அதன்போது அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மின் துண்டிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை!

  • August 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை அன்டோனி புயல் தாக்கியுள்ள நிலையில், காலநிலை குறித்த முன்னறிவிப்புகளை MET OFFICE வழங்கியுள்ளது. இதன்படி பிரித்தானியாவில் கோடைக்காலத்தில் அரிதாக பெயக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காற்று ஏற்படும் எனவும் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. மேலுமு் தென்மேற்கு வேல்ஸிற்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து, இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த மார்க் மார்கோலிஸ் காலமானார்

  • August 5, 2023
  • 0 Comments

‘பிரேக்கிங் பேட்’, ‘பெட்டர் கால் சால்’ தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார். நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகனும், நடிகரும், நிட்டிங் பேக்டரி என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார். 1970 களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மார்கோலிஸ் அன்றிலிருந்து தற்போது வரை நடித்துவந்தார். திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், “பிரேக்கிங் பேட்” மற்றும் “பெட்டர் கால் […]

இந்தியா

`இந்தி நாட்டின் தேசிய மொழி…!” – சர்ச்சையை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி

வாகன விபத்து வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர், இந்தியை தேசிய மொழி எனக் கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதில் மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிமை கோருபவர்கள் தாங்கள் வசிக்கும் அல்லது வணிகம் நடத்தும் இடத்துக்கு அருகிலுள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் (MACT) வழக்கு தொடுக்கலாம். இதனடிப்படையில், இந்த வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், உத்தரப்பிரதேசத்தின் ஃபதேகரில் உள்ள […]

ஐரோப்பா

போரின் நடுவே சொந்த நாட்டு ராணுவத்தினருக்கே இரையாகும் உக்ரைன் பெண் வீரர்கள்!

  • August 5, 2023
  • 0 Comments

உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள், அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு இரையாவதாகவும், தங்கள் சொந்தப் படைகளுக்கு உள்ளேயே போரிடும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த இந்த 18 மாதங்களில், 100க்கும் மேற்பட்ட பெண் ராணுவ வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.மொத்தம் 60,000 பெண்கள் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வந்தாலும், களத்தில் 5,000 பெண் வீராங்கனைகள் மட்டுமே போரிட்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 42,000 க்கும் அதிகமானோர் இராணுவ நிலைகளில் உள்ளனர். உக்ரைன் […]

இலங்கை

மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

  • August 5, 2023
  • 0 Comments

அவசர மருந்து கொள்வனவுகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மாத்திரம் அவசர கொள்வனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்குள் இருந்த பிரச்சினைகள் தற்போது முற்றாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

தமிழ்நாடு

சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜயா என கருத்து சொல்ல விரும்பவில்லை – வானதி சீனிவாசன்

  • August 5, 2023
  • 0 Comments

கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்ட மன்ற உறுப்பினர் நிதி அதிகமாக அங்கன்வாடி மையங்கள் கட்டவும், புதுப்பிக்கவும் அளித்துள்ளோம். என் மண், என் மக்கள் யாத்திரைக்கு அமோக […]

error: Content is protected !!