பொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ்!

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அர்ஜுன் தாஸ். அர்ஜுன் தாஸ் தொடர்ந்து முன்னணி நடிகராக தரமான படங்களைத் தருகிறார், மேலும் அவரது சமீபத்திய திரைப்படமான ‘அநீதி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் படத்தில் எதிர்மறையான பாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஒரு பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ். தற்போது, அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் […]

இலங்கை

நீரை துஷ்பிரயோகம் செய்தால் பாடசாலைகளும் நீர்கட்டணத்தை செலுத்த வேண்டும்!

  • August 6, 2023
  • 0 Comments

பாடசாலைகளுக்கு இலவசமாக நீர் வழங்கப்படுகின்றமையினால், அது துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் அறவிடப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில்   கருத்து தெரிவித்த தேசிய நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத,  1988ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை தீர்மானத்தின்படி பாடசாலைகளுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் நீர் பாடசாலை நடவடிக்கைகளுக்கு அல்லாது ஏனைய […]

செய்தி

விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி!

குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- தோப்பூரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான்-அன்சார் (சுஜா) (31வயது) எனவும் தெரியவருகிறது. குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை

இலங்கையில் கிடைக்கும் இனிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் கலக்கப்பட்டுள்ளது!

  • August 6, 2023
  • 0 Comments

புற்றுநோயை  உண்டாக்கும்  E-951 என்ற இனிப்பான அஸ்பார்டாம் இலங்கையில் கிடைக்கும் இனிப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்தார். இது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த இனிப்பு வகைகள் சந்தையில் தற்போது பரவலாக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பச்சை நிற இனிப்பு பானங்கள் குறைந்த சர்க்கரை இனிப்பு பொருட்களில் இந்த இனிப்பு கலக்கப்பட்டிருந்தாகவும்  ரொஷான் குமார கூறியுள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் […]

ஆசியா

பாக். ரயில் விபத்து – 22 பேர் பலி, 80 பேர் படுகாயம்

  • August 6, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று நடந்த ரயில் விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் தான் ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில், இதுவரை 22 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹசரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதன் […]

ஐரோப்பா

கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க ட்ரோனை இடைமறித்த ரஷ்யா

  • August 6, 2023
  • 0 Comments

கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கருங்கடல் மீது டிரோனை சுட்டு வீழ்த்துவதற்காக ரஷ்ய விமானப்படை தனது SU 30 போர் ஜெட் விமானத்தை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் இதையடுத்து எல்லையருகே வட்டமிட்ட அமெரிக்க டிரொன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் வெடிபொருள் நிரம்பிய ஒரு டிரோன் ரஷ்யாவின் கிரீமியா பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது […]

இலங்கை

கண் வில்லைகள் இறக்குமதியில் 10 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடி! சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கு கண் வில்லைகளை இறக்குமதி செய்ததில் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு சுமார் ஒரு இலட்சம் கண் வில்லைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் சுமார் 10 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் […]

இலங்கை பொழுதுபோக்கு

இலங்கை வருகின்றார் சச்சின் டென்டுல்கர்

  • August 6, 2023
  • 0 Comments

முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் யுனிசெப் இன் தெற்காசியாவிற்கான  பிராந்திய தூதுவருமான சச்சின் டென்டுல்கர் எதிர்வரும் ஒகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட்டில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ளார். கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறுவர்களின் […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் 10 வயது குழந்தைகள் பாடசாலை செல்லத் தடை!

  • August 6, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளின் பள்ளிக் கல்வியைத் தடை செய்ய தலிபான்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தடை ஏற்கனவே நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாடசாலைகளிலோ அல்லது கல்வி நிலையங்களிலோ சேர்க்க வேண்டாம் என தலிபான்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களின் கல்வி உரிமை உட்பட பல உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், மேலும் […]

இலங்கை

மயிலவெ பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் மரணம்- மற்றுமொருவருக்கு காயம்!

  • August 6, 2023
  • 0 Comments

மயிலவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று (06) மாலை 3.00 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பக்மீகம-அடம்பன பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.சந்ரதாஷ (41) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை குறித்த நபருடன் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த கே.பியசாந்த பண்டா (37வயது) என்பவர் காயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச […]

error: Content is protected !!