வட அமெரிக்கா

நைஜர் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள அதிரடி முடிவு

  • August 7, 2023
  • 0 Comments

நைஜர் நாட்டுக்காக இதுவரை வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நைஜரில் ராணுவ சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது.ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான வசையில் நைஜரில் ஆட்சி நிறுவப்பட்டுள்ளமைக்கு கனடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை நைஜருக்கு கனடிய அரசாங்கம் வழங்கி வந்த உதவி திட்டங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜனநாயக ரீதியான ஆட்சி மீண்டும் நைஜரியில் நிறுவப்படும் வரையில் உதவிகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேரடியான அனைத்து உதவிகளும் ரத்து […]

பொழுதுபோக்கு

நயன்தாராவுக்கு முன்பே பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்த நாட்டாமையின் மகள்…

  • August 7, 2023
  • 0 Comments

நயன்தாராவிற்கு முன்பே பிரபுதேவாவை வாரிசு நடிகை ஒருவர் வெறித்தனமாக காதலித்த விடயம் தான் தற்போது பேசுபொளாக உள்ளது. இந்த விஷயம் அவருடைய அப்பாவிற்கு தெரிந்ததும் அவர் கொடுத்த ரியாக்ஷன் தான் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. நாட்டாமை என சொன்னால் முதலில் ஞாபகத்திற்கு வருவது நடிகர் விஜயகுமாரின் முகம் தான். இவருடைய மூத்த மகள் வனிதா ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் பட வாய்ப்பு சரியாக வராததால் ஒதுங்கி விட்டார். பின்பு அவருடைய பர்சனல் பிரச்சனை மூலமும், […]

ஆசியா

ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் உத்தரவு

  • August 7, 2023
  • 0 Comments

வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வட கொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில் வட கொரியாவின் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராக்கெட் லாஞ்ச்சர்கள், ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை […]

இலங்கை

பாடசாலையில் வைத்து மாணவர் துஷ்பிரயோகம் – பொலிஸில் சரண்டைந்த சந்தேக நபர்

  • August 7, 2023
  • 0 Comments

அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(6) மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி பாடசாலை […]

ஆசியா

ஆயுதக்குழுவினர் மூவர் சுட்டுக்கொலை – இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடி(வீடியோ)

  • August 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையின் ஜெனின் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் […]

ஐரோப்பா

தெற்கு உக்ரைனில் ஷெல் தாக்குதல் : மூவர் பலி!

  • August 7, 2023
  • 0 Comments

தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சன் மீது ரஷ்யப் படைகள் இன்று (07.08)  அதிகாலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் இருவர் வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெர்சன் நகரம் மற்றும் கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக உக்ரைனிய இராணுவம் அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல் நள்ளிரவில் ஆரம்பித்து பல மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

‘மாவீரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் ரசிகர்கள்…

  • August 7, 2023
  • 0 Comments

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மாடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. இவர்களுடன் இணைந்து சரிதா, மிஷ்கின், மோனிஷா, சுனில், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். கடந்த ஜூலை 14ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ்ஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இம்மாதம் 11ஆம் தேதி […]

ஐரோப்பா

இலங்கையின் 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை!

  • August 7, 2023
  • 0 Comments

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 48,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 156,000 பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விலங்குகளுக்கான குடிநீர் பிரச்சினையும் உள்ளது. மேலும், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளின் பொறுப்பான முகமைகள் பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்குவதற்கு உழைத்து வருகின்றன எனவும் […]

இலங்கை

வவுனியாக சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு!

  • August 7, 2023
  • 0 Comments

சின்னமுத்து தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில், அம்மை நோய் பரவியதன் காரணமாக மற்றவர்களுக்கும் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்றுடன் (07) முடிவடைய உள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (08) முதல் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு […]

இலங்கை

இலங்கை – ஈரானுக்கு இடையில் புதிய முதலீட்டு திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை!

  • August 7, 2023
  • 0 Comments

இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று (06.08) தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈரான்-இலங்கை கூட்டு பொருளாதார ஒத்துழைப்பு ஆணைக்குழு மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டுமென ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஏகாதிபத்திய மற்றும் சுயநல வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் இலங்கை கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஈரான் ஜனாதிபதி […]

error: Content is protected !!