இந்தியா

மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லையென பொலிஸாரிடம் புலம்பிய திருடன்!

கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி பொலிஸாரிடம் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார். கோழிக்கோடு பகவதியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருடியது தொடர்பாக சஜீவன் என்ற இளைஞரை கைது செய்த பொலிஸார் விசாரணைக்காக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, இப்பகுதி மக்கள் எவரும் சரியில்லை, உண்டியலில் யாரும் காசு போடவில்லை என சஜீவன் புலம்பியதைக் கேட்டு சுற்றி நின்றிருந்த மக்கள் சிரித்துள்ளனர். இக்கோயிலில் கடந்த 2 […]

ஆசியா

10 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் படிக்க கூடாது – தலிபான் அரசின் புதிய அடக்குமுறை

  • August 7, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் பாடசாலைக் கல்வியை தடை செய்ய தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை ஏற்கனவே அந்நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாடசாலைகள் அல்லது கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டாம் என தலிபான் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களின் கல்வி உரிமை உட்பட பல உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதேசமயம் பெண்கள் […]

இலங்கை

பம்பலப்பிட்டியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவு!

  • August 7, 2023
  • 0 Comments

பம்பலப்பிட்டி பகுதியில் இன்று (07.08) மாலை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாத குழுவொன்று கார் ஒன்றை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

சச்சின் நடிப்பில் உருவாகியுள்ள திகில் கலந்த உண்மைச் சம்பவம் செப்டம்பர் 1 வெளியாகிறது

  • August 7, 2023
  • 0 Comments

‘பிகினிங்’ படத்தில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சச்சினும், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘ஜெயில்’ படத்தின் மூலம் பிரபலமான அபர்னதியும் ‘Demon’ (பேய்) படத்தில் இணைந்து நடிக்கின்றனர். பிரபல இயக்குனர் வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அறிமுக இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கிய இப்படம் செப்டம்பர் 1, 2023 அன்று திரைக்கு வர உள்ளது. விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் ஆர் சோமசுந்தரம் தயாரித்துள்ள இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர், திகில் கலந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் […]

உலகம்

இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத் தீ பரவல்! 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மத்திய தரைக்கடல் தீவான சர்டினியாவில் 50க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவி வருகின்றன, பலத்த காற்று காரணமாக தீயை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளை சிக்கலாக்குகிறது 1,100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 14 நீர் சுமந்து செல்லும் விமானங்கள் மத்திய போர்ச்சுகலில் உள்ள காஸ்டெலோ பிராங்கோ பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடுகின்றனர். அதே நேரத்தில் உள்ளூர் அதிகாரிகள் காற்றின் […]

இலங்கை

இரு வாரங்களில் அமுலுக்கு வரவுள்ள தடை உத்தரவு

  • August 7, 2023
  • 0 Comments

அடுத்த இரு வாரங்களில் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஆசியா

சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – நால்வர் பலி

  • August 7, 2023
  • 0 Comments

சிரியாவில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. சிரிய அதிபர் பஷீர் அல் அசாத் தலைமையிலான அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. உள்நாட்டுப்போரில் அதிபர் அசாத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், ஈரான் ஆதரவு குழுவினர் சிரியாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் சிரியா-இஸ்ரேல் எல்லையோரம் இருந்தவாறு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை தடுக்க சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் எல்லைக்குள் […]

இலங்கை

பம்பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு !

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (07) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், பம்பலப்பிட்டி, மரைன் டிரைவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ரஷ்யா!

  • August 7, 2023
  • 0 Comments

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (07.08) வெளியானது. இதன்படி லூனா -25 என்ற லேண்டரை சோயுஸ் என்ற ரொக்கெட் மூலம் ஏவவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த ரொக்கெட்டானது வரும் 11 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1976 க்குப் பிறகு மொஸ்கோவின் முதல் சந்திரப் பயணமாக இது இருக்கும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

உலகம்

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள டிக்லிபூருக்கு வடக்கே 150 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!