உலகம் செய்தி

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • December 8, 2025
  • 0 Comments

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் 3 மீட்டர்(10 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து & பகுப்பாய்வு

2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும்!!

  • December 8, 2025
  • 0 Comments

2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் அதிகரிக்கும் என ஆய்வொன்று கணித்துள்ளது. ஆய்வின்படி நோய் அறிதல் 30.5 மில்லியனையும், இறப்புகள் 18.6 மில்லியனையும் எட்டும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய புள்ளிவிவரங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறித்த நாடுகளில் நோயை கண்டறிவதற்கான பரிசோதனைகள் குறைந்த அளவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், உலகளவில் […]

இலங்கை

இந்தியா, சீனா தலைமையில் இலங்கைக்காக சர்வதேச மாநாடு!

  • December 8, 2025
  • 0 Comments

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் இணைத்தலைமையின் கீழ் இலங்கைக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில பரிந்துரைத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 8 பில்லியன் டொருக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இழப்பை இலங்கையால் தனித்து ஈடுசெய்ய முடியாது. எனவே, இந்தியா, […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிராக கடல் ட்ரோன்களை களமிறக்கும் உக்ரைன்!

  • December 8, 2025
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு எதிராக  கடல் ட்ரோன் தாக்குதல்களை நடத்த  திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த  கடல்-ட்ரோன் நடவடிக்கைகள் கடற்படை உத்திகளை மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது  கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஈடுபாடுகளை மட்டுப்படுத்தியுள்ளதாவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் இப்போது “அரிதாகவே இயங்குகின்றன” என்றும், பெரும்பாலும் ஒளிந்து கொள்கின்றன என்றும் உக்ரைனின் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இது ட்ரோன்களின் செயல்திறனை நிரூபிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குழு 13 […]

இலங்கை

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய வேலைத்திட்டம்! 

  • December 8, 2025
  • 0 Comments

மலையக மக்களுக்கான காணி உரிமை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் சம்பந்தமாக மலையக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய தேசிய வேலைத்திட்டத்துடன் கூடிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் எம்.பி. , “சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், […]

இந்தியா செய்தி

தீக்கிரையான 25 பேர் வானவேடிக்கையால் தீ பரவியதா?

  • December 8, 2025
  • 0 Comments

இந்தியாவின், வடக்கு கோவா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரிவான விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதி ஊழியர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்து முதன்மையாக சமையல் அறை பகுதியில் ஏற்பட்டதாகவும், அங்கே ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு தீ பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டது. […]

இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மீது பெண் விமானி குற்றச்சாட்டு

  • December 8, 2025
  • 0 Comments

எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான குறித்த பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குழந்தையின் […]

அரசியல் இலங்கை

இலங்கைக்காக ஆஸ்திரேலியாவிடம் உதவி கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் 

  • December 8, 2025
  • 0 Comments

டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு […]

இலங்கை செய்தி

வெள்ளத்தால் வெளியில் வந்த ஆயுதங்கள்!

  • December 8, 2025
  • 0 Comments

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் உள்ள கண்டல்காடு – சாவாறு பகுதியில் வெள்ள நீரின் அடியோட்டத்தால் உருவான குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போர் அந்தப் பகுதிக்குச் சென்றபோது சந்தேகத்துக்கிடமான பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தகவல் தரப்பட்டதின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. MILS 36 வகை கைக்குண்டுகள் – 109, T56 வகை துப்பாக்கி ரவைகள் – 1,678 ஆகிய ஆயுதங்கள் வெளிப்பட்டுள்ளன. சம்பவ இடத்துக்குச் சென்ற கிண்ணியா பொலிஸார், திருகோணமலை […]

உலகம் செய்தி

பாலியல் குற்றச்சாட்டு – இலங்கை பேராசிரியர் அமெரிக்காவில் கைது!

  • December 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ஃபெர்ரிஸ் மாநிலத்தில் (Ferris State) பல்கைலைக்கழக பேராசியராக கடமையாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க குடியேற்ற முகவர்கள் கைது செய்துள்ளனர். சுமித் குணசேகர என்ற நபர் நவம்பர் 12 ஆம் திகதி அமெரிக்க குடியேற்ற முகவர்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகனில் (Michigan) உள்ள பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் உதவிப் பேராசிரியராக கடமையாற்றிய அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், நெவாடா பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரங்களில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். குணசேகர பிப்ரவரி 1998 இல் […]

error: Content is protected !!