பொழுதுபோக்கு

துல்கர் சல்மானின் தெறிக்கவிடும் மாஸான ‘கிங் ஆஃப் கோதா‘ டிரெய்லர் இதோ…

  • August 10, 2023
  • 0 Comments

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் 4.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

  • August 10, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டின் சாரங்கனி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.7ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சாரங்கனி பகுதியில் இருந்து தென்கிழக்கே 157 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை

கொழும்பில் மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

  • August 10, 2023
  • 0 Comments

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை  மேற்கொண்டுள்ளனர். இரண்டு தடவைகள் கொழும்பு மாநகர மண்டபத்திற்கு முன்பாகவும், ஹெவ்லொக் டவுனிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணிகள் மீது நீர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியா

ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து பரிதாபமாக மரணம்! பொலிஸார் விசாரணை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் வெட்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கடந்த 6ம் திகதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பன்னீர்செல்வம் இறந்து சில நாட்களுக்குப் பிறகு, கோகுல் நேற்றிரவு புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கோகுல் இறந்த தகவல் அறிந்த கோகுலின் தாத்தா இளங்கோ வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் பன்னீர்செல்வம்-தேன்மொழி தம்பதியின் மகன் கோகுல் (வயது […]

மத்திய கிழக்கு

ஏமனில் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி விடுவிப்பு

  • August 10, 2023
  • 0 Comments

வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்பு துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர். கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுகுறித்து வீடியோ ஒன்றும் […]

பொழுதுபோக்கு

ஒரே திரையரங்கிற்கு ஒன்றாக வந்த தனுஷ், ஐஸ்வர்யா

  • August 10, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படம் இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. ,இந்த நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் அவரது முன்னாள் கணவர் தனுஷ் இருவரும் ஒரே திரையரங்கில் படம் பார்த்துள்ளனர். சென்னையில் உள்ள பிரபல திரையங்கான  ரோகினி திரையங்கிற்கு முதலில் தனுஷ் வந்தார். அதன் பிறகு சில நிமிடங்களில் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது மகன்கள், லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த், அவரது மகன் வேத் மற்றும் […]

ஆசியா

முக்கிய ராணுவ தளபதியை அதிரடியாக நீக்கிய அதிபர் கிம்

  • August 10, 2023
  • 0 Comments

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது முதன்மை ராணுவ தளபதியை அதிரடியாக நீக்கியதுடன், ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், போர் பயிற்சிகள், போருக்கு தயார் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் கிம் ஜாங் உன் ஊக்கப்படுத்தியுள்ளார். வடகொரியாவின் எதிரிகளை எதிர்கொள்வது தொடர்பில் கிம் ஜாங் உன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான், முக்கிய ராணுவ தளபதி Pak Su Il அதிரடியாக நீக்கப்பட்டதுடன், அந்த பொறுப்புக்கு Ri […]

இலங்கை

அஸ்வெசும திட்டத்த நிறுத்துமாறு கோரிக்கை!

  • August 10, 2023
  • 0 Comments

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நிவாரணத் திட்டத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை குறுகிய காலத்திற்கு அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளது. கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மற்றும் அரசாங்கத்தின் 62 உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில் அஸ்வசும திட்டத்தின் மூலம் உண்மையிலேயே தகுதியானவர்கள் மானியங்களை இழந்துள்ளதாகவும், தகுதியற்றவர்கள் மானியங்களை பெற்றுள்ளதாகவும் அதன் மூலம் இத்திட்டம் விமர்சிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். […]

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.6129 ஆகவும் விற்பனை விலை ரூபா 326.7861 ஆகவும் பதிவாகியுள்ளது..  

வட அமெரிக்கா

ராணுவ ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது

  • August 10, 2023
  • 0 Comments

சீனாவை சேர்ந்தவர் ஜிஞ்சாவோ வெய். 22 வயதான இவர் அமெரிக்க கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லாஸ் ஏஞ்சல்சின் வென்சுரா கடற்படை தளத்தில் பணி புரிந்து வந்தவர் வென்ஹெங் ஜாவோ (26). இருவரும் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், போர் கால பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் நவீன தளவாடங்கள் குறித்து சீனாவுக்கு உளவு சொன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து இருவரையும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து சான்டியாகோவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. அதில் […]

error: Content is protected !!