ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை
இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கைத்தொழில்களின் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் அதிகளவு ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால் இலக்கை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையின் வளர்ச்சிக்கான வரிக் கொள்கைகள் தொடர்பான […]













