ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி வழங்கப்படும் – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
உக்ரைன் மீது நேற்றும் இன்றும் கடும் ஷெல் மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய-உக்ரைன் போரின் 537வது நாள் இப்போது கடந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் ஒடேசா பகுதி மற்றும் குர்சோன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒடேசா மாகாணத்தில் இடம்பெற்ற அந்தத் தாக்குதல்களில் மூவர் படுகாயமடைந்ததுடன், தெற்கு உக்ரைன் மீதான பாரிய ஷெல் தாக்குதல்களில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். 03 வாரங்களே ஆன குழந்தை ஒன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் […]













