ஆசியா செய்தி

நீரை சேமிக்க சீன ஹோட்டலில் வசூலிக்கப்படும் கட்டணம்

  • August 16, 2023
  • 0 Comments

சீனாவில் உள்ள ஒரு ஹோட்டல், இரண்டாவது குளியல் அல்லது குளிப்பதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் கொள்கைக்காக சமூக ஊடகங்களில் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், உயர்தர ஹோட்டல் அதன் வாடிக்கையாளர்களிடம் ஒரு இரவுக்கு 2,500 யுவான் (ரூ. 28,850) வசூலிக்கிறது. தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஹோட்டலில் அடையாளம் தெரியாத சீனப் பெண் ஒருவர் இரண்டு இரவு தங்குவதற்கு முன்பதிவு செய்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவள் அறைக்குள் நுழைந்தபோது, அவள் அதிர்ச்சியடையச் செய்யும் […]

உலகம்

மீண்டும் நிலச்சரிவு: இமாச்சல்- உத்தராகண்டில் 60 பேர் பலி

கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்துவருவதாலும், அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மீண்டும் மீண்டும் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட், இமாச்சலில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். தென் மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்தது. மழை வெள்ளம், நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது […]

ஆசியா

பாகிஸ்தானில் பதற்றம்! தேவாலயங்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜரன்வாலா மாவட்டத்தில் உள்ள ஏராளமான தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியதாக புகைபடங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தில் 5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் வகையில் […]

பொழுதுபோக்கு

திகிலூட்டும் பேய்கள்… டீமன் படத்தின் டிரைலர் வெளியானது

  • August 16, 2023
  • 0 Comments

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ள டீமன் திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது. இந்த படத்தில் அறிமுக நாயகன் சச்சின் என்பவர் கதாநாயகனாக நடிக்க, அபர்னதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுருதி பெரியசாமி, ரவீனா தாகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரோனி ரம்பஹேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சோமசுந்தரம் என்பவர், விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். உண்மை சம்பவ மையமாக வைத்து உருவாக்கி […]

இலங்கை

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிப்பு! செல்வம் அடைக்கலநாதன்

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றிருந்தது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”இன்று முல்லைத்தீவிலே காணி விடுவிப்பு சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. […]

இலங்கை

இலங்கையில் 43 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட இரத்தினக்கல்!

  • August 16, 2023
  • 0 Comments

இரத்தினபுரியில் இருந்து மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட மாணிக்கக்கல்  பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு நீல  இரத்தினக் கல் இன்று (16.08)  விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஹவத்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுடைய நிறை 99 கரட் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பாலமடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கம் கொள்வனவு […]

ஐரோப்பா

வீழ்ச்சியடைந்து வரும் நெதர்லாந்தின் பொருளாதாரம்!

  • August 16, 2023
  • 0 Comments

தொற்றுநோய்க்கு பிறகு நெதர்லாந்து பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழச்சியடைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களிடையே  முந்தைய மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3% குறைந்துள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி இவ்வாண்டின் முதல் காலாண்டின் 0.4% வீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நெதர்லாந்து இப்போது பிரதம மந்திரி மார்க் ரூட்டின் ராஜினாமாவால் தூண்டப்பட்ட அரசியல் எழுச்சியுடன் பொருளாதார சரிவையும் எதிர்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் பற்றாக்குறை, ஐரோப்பிய […]

பொழுதுபோக்கு

‘துருவ நட்சத்திரம்’ புதிய அப்டேட்! ரசிகர்களை கிறங்க வைக்கும் செய்தி

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த ஏழு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வருகிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த டிரெய்லருக்குப் பிறகு, இந்த திட்டத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே ஒருபோதும் குறையவில்லை, இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை தொடங்க பட குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய டிரெய்லர் தயாராகி தணிக்கை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தவுள்ளது!

  • August 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து மீண்டும் அடிப்படை விகிதத்தை உயர்த்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன்படி அடுத்த (09) மாதம் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு மீண்டும் கூடும் போது, வட்டி விகிதத்தை 05 வீதத்தால் உயர்த்தும் எனத் தெரிவித்துள்ளனர். தற்போது விதிக்கப்பட்டுள்ள பணவீக்கத்தால் அடித்தட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இது அம்மக்களை மேலும் கவலையில் தள்ளும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இந்தியா

தாஜ்மஹால் வளாகத்தில் உலக கிண்ணம்!

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் தாஜ்மஹால் வளாகத்தில் இன்று (16) உலகக் கிண்ணம் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. எதிர்வரும் ஒக்டோபர் 5 முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மீதமுள்ள நிலையில், மதிப்புமிக்க வெள்ளி கோப்பை இன்று 16 உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தப்பட்டது.  

error: Content is protected !!