புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

வரவர அழகு கூடுதே… சுண்டி இழுக்கும் இலங்கைப் பெண் ஜனனியின் புதிய புகைப்படங்கள்…

  • August 18, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். அன்பு, காதல், பாசம், சண்டை என அனைத்தையும் இந்த ஒரே நிகழ்ச்சியில் நம்மால் பார்க்க முடியும். இதுவரை 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பலர் சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடித்து வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சீசன் 6ல் கலந்துகொண்டு அதிக அளவிலான ரசிகர்களை பெற்ற ஜனனி தற்போது விதவிதமான புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் […]

இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கி

நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 314.78 முதல் ரூ. 316.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 327.87 முதல் ரூ. 329.49 ஆகவும் பதிவாகியுள்ளது. வளைகுடா நாட்டு கரன்சிகள் உட்பட வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

“மாமன்னன்” திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்….

  • August 18, 2023
  • 0 Comments

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப […]

செய்தி

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குழுங்கிய கட்டிடங்கள்… பீதியில் மக்கள்

  • August 18, 2023
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பின் அதிர்வும் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை […]

இலங்கை

கிளிநொச்சியில் பாம்பு கடிக்கு இலக்காகி குழந்தை மரணம்

  • August 18, 2023
  • 0 Comments

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரமந்தனாறு பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.குறித்த குழந்தை உடனடியாக தருமபுரம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையினரால் குழந்தையை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து உறவினர்கள் அந்த […]

பொழுதுபோக்கு

‘தளபதி 68’ படத்தின் மிக முக்கிய அப்டேட் வெளியானது

  • August 18, 2023
  • 0 Comments

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 68’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதற்கட்ட பணிகள் […]

இலங்கை

குருந்தூர் மலையில் அதிகரிக்கும் பதற்றம் : கலக தடுப்பு பிரிவினருக்கும் அழைப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

குருந்தூர் மலையில்  03 நாட்களுக்கு ரதனசூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகள் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்காக பொது பக்தர்களின் குழுவும் இணைந்தது. இதற்கிடையில், குறித்த பகுதியில் ஒன்றுக்கூடிய யாழ் மக்களும், பூஜை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் பிக்குகளுக்கும், தமிழர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது, பின்னர் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் தற்போது கலவர தடுப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

  • August 18, 2023
  • 0 Comments

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு […]

ஐரோப்பா

லண்டன் அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவம் – ஊழியர் ஒருவர் பணிநீக்கம்

  • August 18, 2023
  • 0 Comments

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இங்கு கி.மு. 15ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் இதனை பார்வையிடுகின்றனர். இந்தநிலையில் தற்போது அருங்காட்சியகத்தில் நடத்திய ஆய்வின்போது சில விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஆனால் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் […]

ஐரோப்பா

மொஸ்கோவின் சிவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

உக்ரைன் மொஸ்கோவின் கட்டட தொகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து சிவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாஸ்கோ நேரப்படி அதிகாலை 4 மணியளவில், உக்ரைன்  ஆளில்லா வான்வழி விமானத்தைப் பயன்படுத்தி   பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் விவரித்துள்ளது.

error: Content is protected !!