இலங்கை

இலங்கையில் தலைத்தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்!

  • August 22, 2023
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலங்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் (ஆகஸ்ட்) வரை சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த புள்ளிவிவரங்கள் மாறலாம் எனவும், இதுவரை 28 பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை

வாகன இறக்குமதியில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

  • August 22, 2023
  • 0 Comments

பொது போக்குவரத்து பேருந்துக்கள், லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதில் எழும் கடன் கடிதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் கடனுதவிக்கான சர்வதேச அங்கீகாரம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் கடன் […]

ஐரோப்பா

சிறுமி சாரா கொலை வழக்கு :பாகிஸ்தானில் இருந்து லண்டன் பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பு

  • August 22, 2023
  • 0 Comments

சர்ரே பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி தொடர்பில், பொலிஸார் வெளியிட்ட புதிய தகவலில், சிறுமியின் இறப்பு குறித்து பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 10ம் திகதி சர்ரே பொலிஸார் முன்னெடுத்த சோதனையில், குடியிருப்பு ஒன்றில் இருந்து 10 வயது சிறுமி சாரா ஷெரீப் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், தொடர்புடைய தகவலை பாகிஸ்தானில் இருந்து சிறுமியின் தந்தையே லண்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னரே […]

இலங்கை

காலி சிறையில் பரவிவரும் இனம்தெரியாத பக்டீரியா தொற்றால் பலர் பாதிப்பு!

  • August 22, 2023
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அந்தந்த உயிரிழப்புகளுக்கு பாக்டீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் ரிமாண்ட் சிறையில் உள்ள கைதிகள் எனவும்  இச்சம்பவம் தொடர்பாக  அறிக்கையைப் பெறவும் […]

பொழுதுபோக்கு

‘மார்க் ஆண்டனி’ இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு

  • August 22, 2023
  • 0 Comments

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் […]

தென் அமெரிக்கா

கொலம்பிய ஆயுத படையால் மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

  • August 22, 2023
  • 0 Comments

கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள் ஆனைத்தும் மீண்டும் கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டன. கடத்தப்பட இருந்த 43 அரியவகை ஆமைகளை கொலம்பிய ஆயுத படையினர் மீட்டுள்ளனர். இவற்றில் 25 ஆமை குஞ்சுகள் மற்றும் 3 வளர்ந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அடங்கும். இந்த ஆமைகளின் பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மீட்டக்பட்ட அனைத்து ஆமைகளும் மீண்டும் கடலில் விடப்பட்டன.

இலங்கை

ரத்வத்தை விவகாரம்: சபையில் கலகம்

  • August 22, 2023
  • 0 Comments

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை-எல்கடுவ ரத்வத்தை உள்ள அரச தோட்டமொன்றைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை தோட்ட பிரதி முகாமையாளர் விரட்டி விரட்டி பீதியை கிளப்பி அவர்களின் வீடுகளை இடித்த சம்பவம் காரணமாக பாராளுமன்றத்தில் கடும் அமளி செவ்வாய்க்கிழமை (22) […]

ஆசியா

அமெரிக்க-தென்கொரிய ராணுவ தொழில்நுட்பங்களை திருடிய வடகொரியாவின் ஹேக்கர்கள் குழு

  • August 22, 2023
  • 0 Comments

அமெரிக்கா ராணுவத்துடன் இணைந்து தென்கொரியா ராணுவம் அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது. இதற்காக ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தோடு ஒப்பந்தமிட்டுள்ளது. இந்த நிறுவனமானது இருநாடுகளுக்கும் உகந்த வகையில் ராணுவ பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்தநிலையில் அங்கு பணிபுரியும் நிறுவன ஊழியர்கள் சிலருக்கு இ-மெயில் வழியாக குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் தரவுகள், அறிக்கைகள் ஆகியவை திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் […]

இலங்கை

துருக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பரிதாபமாக உயிரிழந்த 12 பேர் – 19 பேர் காயம

  • August 22, 2023
  • 0 Comments

மத்திய துருக்கியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி சாலையோர பள்ளத்தில் விழுந்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மத்திய துருக்கிய நகரமான யோஸ்காட் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி சாலை அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததாக ஆளுநர் மெஹ்மத் அலி ஓஸ்கான் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, அதற்கான விசாரணை தொடங்கியுள்ளதாகவும், […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம்

  • August 22, 2023
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள LNG ஆலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஐரோப்பாவில் எரிவாயு விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ஐரோப்பாவிற்கு LNG எரிவாயுவை பெரும்பாலும் ஏற்றுமதி செய்யும் ஆலையாக இது கருதப்படுகிறது. வேலை நிறுத்த எச்சரிக்கையுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவில் எரிவாயு விலை நேற்று சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் […]

error: Content is protected !!