அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் சந்திரயான்-3! இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய தகவல்

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை அடுத்து, ரோவர் 8 மீட்டர் தூரத்திற்கு கடந்துள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், ரோவர் திட்டமிட்டபடி சிறப்பாக இயங்குவதாகவும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான்-3 நிலவுப் பணி தற்போது தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து வருகிறது. “திட்டமிடப்பட்ட அனைத்து ரோவர் இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டன. ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக […]

இந்தியா

ஜி20 மாநாட்டில் பங்கேற்க புடின் இந்தியா வருவாரா? ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட தகவல்

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வரமாட்டார் என ரஷ்ய அதிபர் மாளிகை கிரிம்ளின் தெரிவித்துள்ளது. அத்துடன் உச்சிமாநாட்டில் புடின் காணொலி வாயிலாக அல்லது பிற வழிகளில் பங்கேற்பது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் புடின் நேரடியாக பங்கேற்கவில்லை. மாறாக மாநாட்டில் புடின் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிக்ஸ் மாநாட்டை போன்றே ஜி20 மாநாட்டிலும் […]

இந்தியா

இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு குவியும் வாழ்த்து!

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த 2023 உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப்போட்டி அஸர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இந்தியாவின் 18 வயதான இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வீழ்த்திய நோர்வேயின் மெக்னஸ் கார்ல்சன் ஆறாவது தடவையாக உலக சம்பியனானார். இந்நிலையில் உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரக்ஞானந்தாவினால் தேசத்திற்கு பெருமை கிடைத்துள்ளதாகவும் […]

மத்திய கிழக்கு

சூடானில் தொடரும் உள்நாட்டு போர் -ஐ.நா எச்சரிக்கை

  • August 25, 2023
  • 0 Comments

சூடானில் ராணுவத்திற்கு தலைமை தாங்கும் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை ராணுவ அதிரடிப் படைகளின் தலைவரான முகமது ஹம்தான் ஹெமேதி டகாலோ ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு படைகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உயிருக்கு பயந்து 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே சவூதி அரேபியா அரசாங்கம், மே மாதம் முதல் […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு முன் குவிக்கப்பட்ட இராணுவம் பரபரப்பு

  • August 25, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் […]

பொழுதுபோக்கு

69வது தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

இந்திய அரசால் 2021ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது, உலகநாயகன் கமல்ஹாசன் ‘புஷ்பா : தி ரூல்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கமல் இன்று ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அவர் தமிழில் எழுதியது: “69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘கடைசி விவசாய’ படத்திற்காக […]

பொழுதுபோக்கு

ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால் சோகத்தில் நானி

  • August 25, 2023
  • 0 Comments

இந்திய அரசு சார்பில் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. நானி பதிவு தமிழில் ஜெய்பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை தேர்வு குழு நிராகரித்தது […]

இலங்கை

சரத் வீரசேகரவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க கோரி முல்லைத்தீவு சட்டத்தரணிகள் கண்டன போராட்டம்

  • August 25, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவமானமாக கருத்துரைத்தமைக்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதுவிடின் நீதித்துறை இயங்குவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரி.பரஞ்சோதி தெரிவித்தார். சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கண்டன போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையானது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, நீதிமன்ற நடவடிக்கைகள், வழங்கப்பட்ட கட்டளைகள் […]

இலங்கை

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண்! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் நேற்று (24) மாலை ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அட்டம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையின் பின்னர், சந்தேக நபர் தப்பிச் சென்றதுடன், அவரது புகைப்படத்தை பொலிஸார் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் […]

வட அமெரிக்கா

கனடிய விமான நிலையத்தில் மீட்கப்பட்ட சட்டவிரோத மருந்துப் பொருட்கள்

  • August 25, 2023
  • 0 Comments

கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் சுமார் 3.3 தொன் எடையுடைய சட்டவிரோத மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் இரண்டு மாத காலப்பகுதியில் இவ்வாறு பாரிய அளவில் சட்டவிரோத மருந்து பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமான சட்டவிரோத மருந்து பொருட்கள் ஆசியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆசிய நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பாரிய அளவிலான […]

error: Content is protected !!