இலங்கை செய்தி

நிலம் வாங்க 05 மில்லியன், வீடு கட்ட 05 மில்லியன் வழங்கும் அரசாங்கம்!

  • December 11, 2025
  • 0 Comments

முந்தைய அரசாங்கங்கள் மக்களுக்கு போதுமான இழப்பீடுகளை வழங்காததன் காரணமாகவே நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற மக்கள் தயங்கியதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்கள் நிலம் வாங்க 10 இலட்ச ரூபாவும், வீடு கட்ட 04 இலட்சம் ரூபாவும் வழங்கிய நிலையில் மக்கள் தயக்கம் காட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போதைய அரசாங்கம் நிலம் வாங்க 05 மில்லியன் ரூபாவும், வீடு கட்ட 05 மில்லியன் ரூபாவும் முன்மொழிந்துள்ளதால் மக்கள் அந்த […]

உலகம் ஐரோப்பா செய்தி

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: பிரிட்டன் பின்னடைவு!

  • December 11, 2025
  • 0 Comments

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீகரகம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து 8 ஆவது இடத்தில் உள்ளது. உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை கனடாவைச் சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற பிரபல நிறுவனம் நேற்று வெளியிட்டது. நாடொன்றின் கடவுச்சீட்டுமூலம் விசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை அடிப்படையாகக்கொண்டே தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. மேற்படி பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்துள்ளது. 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய அணுகலைப் அந்நாட்டு […]

உலகம் செய்தி

துரிதமாக விசா வழங்கும் தங்க அட்டை (Gold Card) திட்டத்தை அறிமுகம் செய்த ட்ரம்ப்!

  • December 11, 2025
  • 0 Comments

குறைந்தபட்சம் $1 மில்லியன் (£750,000) செலுத்தக்கூடிய பணக்கார வெளிநாட்டினருக்கு உடனடியாக விசா வழங்கும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அட்டையை கொள்வனவு செய்பவர்களுக்கு விரைவான மற்றும் தகுதியான குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ட்ரம்ப் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த தங்க அட்டை ( Gold Card) திட்டமானது அமெரிக்காவிற்கு நன்மையை அளிக்கக்கூடியவர்களுக்கு மட்டும் உரித்துடையதாகும். இத்திட்டத்தின் படி தனிநபருக்கு $1 மில்லியன் அமெரிக்க […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?

  • December 11, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். “ பேரிடர் நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை.” எனவும் அவர் கூறினார். எனினும், அவசரகால சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார். அதேவேளை, “அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் […]

உலகம்

காசாவில் போர் குற்றங்களை செய்த ஹமாஸ் – அம்னஸ்டி தெரிவிப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

காசாவில் ஹமாஸ் அமைப்பினரும் போர் குற்றங்களை செய்துள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதல்களின் போது சர்வதேச மனிதாபிமான சட்டம், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தன” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 173 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 அன்று பொதுமக்களை பெருமளவில் கொன்றது “மனிதகுலத்திற்கு எதிரான அழிப்பு குற்றத்திற்கு” சமம் […]

அரசியல் இலங்கை செய்தி

மலையக மக்களை வடக்கில் குடியேற்ற தயார்: சுமந்திரன் அறிவிப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

“வடக்கு, கிழக்கில் குடியேற வருமாறு மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்.” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என்ற மனோ கணேசனின் அறிவித்தலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பென்டகனில் நடைபெற்ற முத்தரப்பு பாதுகாப்பு கூட்டம்!

  • December 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. பென்டகன் எனப்படும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்திலேயே முத்தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஆக்கஸ் (AUKUS) எனப்படும் பாதுகாப்பு கூட்டணியில் மேற்படி மூன்று நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ளது. இதற்குரிய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணக்கம் வெளியிட்டிருந்தன. எனினும், அமெரிக்காவுக்கு முதலிடம் என்ற கொள்கையால் இத்திட்டம் […]

அரசியல் இலங்கை செய்தி

மீள்குடியேற்றம்: மஹிந்தவிடம் பாடம் கற்குமாறு நாமல் அழைப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

” வடக்கில் பெருமளவான மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருந்தனர். போர் முடிவடைந்த பின்னர் அவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் இதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். “ அபாய வலயங்களில் வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்களை தற்காலிக இருப்பிடங்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின்னர் மாற்று காணிகள் தேடப்பட வேண்டும். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை குறுகிய காலப்பகுதியில் மீள் குடியமர்த்துவதற்குரிய பொறிமுறை […]

உலகம் செய்தி

வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

  • December 11, 2025
  • 0 Comments

வெனிசுலா கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை அமெரிக்க படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், வெனிசுலா கடற்கரையில் ஒரு பெரிய டேங்கரை கைப்பற்றியுள்ளதாகவும், உண்மையில் ஒரு நல்ல காரணத்திற்காக இது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடலோர காவல்படையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு அமெரிக்க துருப்புக்கள் உதவியதாக மற்றுமொரு அதிகாரி கூறியுள்ளார். அண்மைக்காலமாக வெனிசுலா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் […]

உலகம்

மொராக்கோவில் (Moroccan) இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்புகள் – பலர் பலி!

  • December 11, 2025
  • 0 Comments

மொராக்கோவின் (Moroccan) ஃபெஸ் (Fez) நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 04 மாடி குடியிருப்புகள் இரண்டு இவ்வாறு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதில் சுமார் 08 குடும்பங்கள் வசித்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கட்டிடங்கள் பல ஆண்டுகளாக சேதமடைந்திருந்த  நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான  பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக […]

error: Content is protected !!