இலங்கை

இலங்கையில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கும் , இராணுவத்தினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு!

  • August 27, 2023
  • 0 Comments

அண்மைக்காலமாக இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிகளை கையாள்வதில் அவர்கள் பெற்றுள்ள பயிற்சியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுடன் இருக்கும் உறவுகளை விட்டுக்கொடுக்க முடியாமல் முன்னாள் இராணுவத்தினர் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட […]

உலகம்

ஹைதியில் கிறிஸ்தவ மத பேரணியில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி

  • August 27, 2023
  • 0 Comments

ஹைதி நாட்டில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டு மக்களில் பலர் சுய பாதுகாப்பு குழுக்களில் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் வா காலே என்ற குழுவானது, பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது. ஆனால், உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் சில சமயங்களில் இந்த குழு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், வன்முறை தூண்டி விடப்படுவதுடன், மக்களிடையே அச்சம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் கனான் என்ற புறநகர் பகுதியில் பாதிரியார் மார்க்கோ என்பவர் தலைமையில் […]

இலங்கை

கண்டி நகர எல்லையில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

  • August 27, 2023
  • 0 Comments

கண்டி நகர எல்லையில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (28.08) முதல் 03 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹெரா திருவிழாவுடன் நகரில் ஏற்பட்டுள்ள கடும் வாகன நெரிசலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர்  லலித் யூ கமகே தெரிவித்தார். இதன்படி கண்டி நகர எல்லையிலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 28, 29 மற்றும் 31ஆம் திகதிகளில் மூடப்பட்டு செப்டம்பர் முதலாம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார். பாடசாலை விடுமுறைக்கு […]

இலங்கை

பிரமிட் திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!

  • August 27, 2023
  • 0 Comments

பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பிரமிட் திட்டம் ஒரு வியாபார முறையல்ல என்றும் அது குற்றச் செயல் என்றும் அமைச்சர் கூறுகிறார். 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் படி, இந்த பிரமிட் திட்டத்தை மத்திய வங்கி தடை செய்துள்ளது. எனவே குற்றவியல் சட்டம் இந்த பிரமிட் […]

இலங்கை

சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வர அனுமதி!

  • August 27, 2023
  • 0 Comments

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி  எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் இந்த கப்பலுக்கு இடமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளைஇ இந்தக் கப்பல் தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா

ஆத்திரத்தில் காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய கள்ளக்காதலி..!

  • August 27, 2023
  • 0 Comments

உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியை சேர்ந்தவர் மெஹந்தி லால் 60 வயதாகிறது. இவருக்கு ஒரு கள்ளக்காதலி இருக்கிறார். அவருக்கு 45 வயதாகிறது. இந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருகிறார். அவருக்கு 19 வயதாகிறது.இந்த கள்ளக்காதல் 5 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி உள்ளது. மகளுக்கு இப்போது 19 வயது என்றால், இந்த ஜோடி கள்ள உறவை தொடங்கியபோது, 14 வயது சிறுமியாக இருந்திருக்கிறார். தந்தை இல்லாமல் வளர்ந்த சிறுமிக்கு, தாயின் கள்ளக்காதல் குறித்து அந்த வயதில் அறியவில்லை. இந்த […]

பொழுதுபோக்கு

லியோ ஆடியோ லான்ச் எங்கே, எப்போது தெரியுமா?. அதிரடியாக வந்த அப்டேட்

  • August 27, 2023
  • 0 Comments

இப்போது லியோ படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் லியோ. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர்களான மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர்களை தொடர்ந்து அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் அர்ஜுனின் அறிமுக வீடியோ வெளியாகி ஹைப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் வெளிநாட்டில் நடக்க […]

இலங்கை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஜெய்சங்கர்!

  • August 27, 2023
  • 0 Comments

13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரப் பகிர்வை கொண்டுவர  மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்க உறுப்பினர்களுக்கும், நாட்டில் உள்ள அரசியில் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் காணொலி மூலம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா செயல்படுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான வளமான எதிர்காலத்திற்காக […]

இலங்கை

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை!

  • August 27, 2023
  • 0 Comments

தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில் விவரம் சரியாக சரிபார்க்கப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜுலை மாதம் தொடர்பான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வைப்பிலிட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தகவல்களை விரைவாக சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக கூறியுள்ளார். மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், […]

error: Content is protected !!