இலங்கை

யாழில் ஒரே தடவையில் பிறந்த மூன்று பிள்ளைகள் (புகைப்படம்)

  • August 27, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27)பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர். குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகம்

அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!

  • August 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடாவில் வெள்ளையர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 கறுப்பின மக்கள் கொல்லப்பட்டனர். இனவெறியின் அடிப்படையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது வெள்ளையர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தில் உள்ள கறுப்பின பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேவேளை அமெரிக்காவில் இந்த ஆண்டில் […]

இலங்கை

நோயுற்ற பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!

திருகோணமலை -தெவனிபியவர பகுதியில் 47 வயதுடைய நோயுற்ற பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹதிவுல்வெவ -தெவனிபியவர பகுதியில் நோயுற்ற நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது உடைய இளைஞரொருவரை கைது செய்துள்ளனர். சம்பவம் […]

உலகம்

அண்டார்டிகா – கூகுள் மேப்பில் திடீரென தெரிந்த மர்ம கதவு..!

  • August 27, 2023
  • 0 Comments

கூகுள் மேப்பினால் அண்மையில் அண்டார்டிகாவில் மர்மமான ரகசிய கதவு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளவாசிகள் பலரும் இந்த கதவானது 2ஆம் உலகப்போருக்கு பின் ஹிட்லர் தப்பிச் சொல்வதாக கூறப்படும் கதையுடன் தொடர்புடையதாக இருக்கலாமென குறிப்பிட்டு வருகின்றனர்.இரண்டாம் உலகப்போரின் போது நாசிக்களால் கட்டப்பட்ட இரகசியமான ஒரு பதுங்கும் இடம் என்று பலர் இதனை குறிப்பிடுகின்றனர்.மேலும் சிலரோ ஒரு படி மேலே போய் இது ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் தெரிவித்துள்ளனர். இதுவரை நாம் […]

இலங்கை

பொருளாதார நெருக்கடியில் உள்ள பிரண்டினா பயனாளிகளுக்கு நிதியுதவி

  • August 27, 2023
  • 0 Comments

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள 2091 பிரண்டினா பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரண்டினா “லைப் லைன்” நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பசளை தட்டுப்பாட்டுடன் உணவு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பிரண்டினா லைப் லைன் திட்டத்தின் ஊடாக 3500 ரூபாய் வீதம் […]

இலங்கை

வவுனியாவில் 162,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை (26.08) விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 162,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இவ் மாம்பழத்தை வவுனியா, […]

பொழுதுபோக்கு

உயிர் மற்றும் உலக்குடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா!

  • August 27, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் பிள்ளைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். இதனையடுத்து வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இந்த குழந்தைகளுக்கு  உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என பெயர் வைக்கப்பட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். […]

அறிந்திருக்க வேண்டியவை பொழுதுபோக்கு

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் “இ-சிகரெட்” பயன்பாடு; அப்படினா என்னனு தெரியுமா?

  • August 27, 2023
  • 0 Comments

உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரம் நிலையில், இ-சிகரெட்  எனப்படும் Electronic Nicotine Delivery Systems (ENDS) வெகு விரைவாக பிரபலமடைந்து வருகின்றது. இ- சிகரெட்டுகள் குறித்தும் அதன் அசாத்தியப் பயன்பாடு குறித்தும் தற்போது பொதுமக்களுக்குப் பரவலாகத் தெரியவந்தன. இ- சிகரெட் என்றால் என்ன? உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். அவற்றில் முக்கியமானது சிகரெட். ஆனால் சிகரெட்டைப் போல நெருப்பு கிடையாது. சாம்பல், புகை வெளியே […]

இந்தியா

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியா : ஆதித்யா எல் 01 விண்கலத்தை எப்போது ஏவுகிறது தெரியுமா?

  • August 27, 2023
  • 0 Comments

இந்தியாவின் சந்திரயான் 3 நிலவு தரையிறங்கும் பணியின் கீழ், சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவரின் பின்னணியில் இந்தியா தனது முதல் சூரிய ஆய்வு பணிக்கு தயாராகி வருகிறது. அதன்படி, சூரியனை ஆராய்வதற்காக பயன்படுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் ஏற்கனவே ஸ்ரீ ஹரிகோட் விண்வெளி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விண்கலம் செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என்றும், சரியான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. […]

இலங்கை

சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினம்! போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு

சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இணைந்த வடகிழக்கில் மன்னார் மற்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கபட்டோர் உறவினர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவி அ.அமலநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையில், ”எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். கடந்த காலத்தில் நாங்கள் இத்தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். இந்த தடவையும் […]

error: Content is protected !!