இலங்கை

இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்!

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு FIFA தீர்மானித்துள்ளது. FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை விளையாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை விளையாட்டு அமைச்சின் சிறந்த பதிலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் நேற்று (27) எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், செப்டம்பர் 29 அன்று புதிய FFSL செயற்குழுவிற்கான […]

தமிழ்நாடு

வைகைப்புயலின் தம்பி மறைவிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மூர்த்தி

  • August 28, 2023
  • 0 Comments

மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் வசித்து வந்த நடிகர் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன்(52) கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஜெகதீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் ஐராவதநல்லூர் பகுதியில் உள்ளவர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வடிவேலுக்கு 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மொத்தம் 7  நபர்கள் உடன் பிறந்தவர்கள்  இந்நிலையில் அவரது தம்பி ஜெகதீஸ்வரன் தற்போது காலமாகியுள்ளார் அவரது வீட்டில் […]

ஆன்மிகம்

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ சிறப்பு அபிஷேக ஆராதனை!

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மேற்கொள்ளப்பட்டது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைக்க முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, இன்று அரிசி மாவு, மஞ்சள், […]

ஐரோப்பா

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வருவோருக்கு இடமளிக்கமுடியாமல் போராடும் இத்தாலி!

  • August 28, 2023
  • 0 Comments

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இத்தாலியின் தெற்குப் புறக்காவல் நிலையமான லம்பேடுசா தீவில், வார இறுதியில் 4,200க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்ளுர் அதிகாரி, “நான் 1990 களில் இருந்து புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சனைகளை கையாண்டு வருகிறேன். நான் எல்லாவற்றையும் […]

இந்தியா

நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்- மோடிக்கு சாமி சக்கரபாணி வேண்டுகோள்!(வீடியோ)

  • August 28, 2023
  • 0 Comments

நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14ம் திகதி விண்ணில் செலுத்தியது.அதன்படி, கடந்த 23ம் திகதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் […]

இலங்கை

நகை கொள்ளையடித்த கும்பலை மடக்கி பிடித்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவு!

  • August 28, 2023
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் இரவில் கத்தி காட்டி மிரட்டி நகைகொள்ளை அடித்த கும்பல் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது, யாழ் மாவட்டத்தில் வீடுகளுக்குள் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கத்தி காட்டி நகை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் கடந்த வாரங்களில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்மாவட்ட பிரதி பொலிஸ்மா […]

இலங்கை

யாழில் முதியவர் ஒருவர் மரணம்! பொலிசார் விசாரணை

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்கிற 57 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னரே தெரியவரும். சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஐரோப்பா

பெலாரஸுடனான எல்லையை மூடுவோம் என போலந்து எச்சரிக்கை!

  • August 28, 2023
  • 0 Comments

வாக்னர் கூலிப்படையினர் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு சம்பவம் நடத்தால் போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் பெலாரஸுடனான தங்கள் எல்லைகளை முற்றிலுமாக மூடும் என போலந்து உள்துறை அமைச்சர் இன்று (28.08) எச்சரித்துள்ளார். நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் போலந்து உள்துறை அமைச்சரின் இந்த கருத்து வந்துள்ளது. பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பினர்களான லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் வாக்னர் கூலிப்படையினர் பெலாரஸுக்கு வந்தத்தில் […]

இலங்கை

குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படுமா? செல்வம் எம்பி

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் உடனடியாக விடுபடுகின்ற ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் இன்றையதினம் (28) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் விமான போக்குவரத்தில் பாதிப்பு!

  • August 28, 2023
  • 0 Comments

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் விமானங்கள் தாமதமாக வரலாம் என இங்கிலாந்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!