விளையாட்டு

உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்த ஜோகோவிச்

  • August 30, 2023
  • 0 Comments

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான ‘கிராண்ட்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் […]

உலகம்

நண்டுகளை அழிப்பதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கிய நாடு! என்ன காரணம் தெரியுமா?

இத்தாலி நாட்டில் தற்போது நீல நிற நண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆரம்ப காலத்தில் இத்தாலியில் ஒன்றிரண்டு என நீல நண்டுகள் இருந்த நிலையில், தற்போது அதன் நிலை மாறி, பல கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கு இது காரணமாகி விட்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும் நீல நிற நண்டு இனத்தை சமாளிக்க இத்தாலி அரசாங்கம் அவசர அவசரமாக பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியுள்ளது. இந்த நீல நண்டு இனம் மேற்கு அட்லாண்டிகில் தோன்றி, […]

இலங்கை

தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தை! இளைஞர் யுவதிகள் பங்கேற்பு

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்காக தனியார் துறையில் வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தையானது நேற்று (29) நடாத்தப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த தொழில் சந்தையினை மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சேவை துறை, விருந்தினர் விடுதி, தனியார் வைத்தியசாலை , நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றிய ஆலோசனைகள் போன்ற துறைகளுக்கான நேர்முக […]

இலங்கை

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு – சந்தேகநபர் தப்பியோட்டம்!

போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றின் போது, இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரளை – வனாத்தமுல்ல பிரதேசத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது, 150 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதன்போது, அவருடன் மகிழுந்தில் இருந்த மற்றுமொரு நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும், அதனையடுத்து பொலிஸார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபரில் இடம்பெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு

  • August 30, 2023
  • 0 Comments

ஒக்டோபர் 14ம் திகதி பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள பிரதமர் அன்டனி அல்பெனிஸ், அவுஸ்திரேலிய மக்களை ஒன்றிணைப்பதற்கான சிறந்ததாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவித்துள்ளார். சர்வஜனவாக்கெடுப்பில் மக்கள் பூர்வீக குடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தால் பூர்வீக இன மக்கள் அரசமைப்பினால் அங்கீகரிக்கப்படுவார்கள் . அதுமட்டுமல்லாது சட்டங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை வழங்குவதற்காக அமைப்பொன்று உருவாக்கப்படும்.அதேவேளை அவுஸ்திரேலிய பிரதமரின் […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவிப்பு!

  • August 30, 2023
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்புடையதான இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையான அறிவித்தல்களை கப்பலின் காப்புறுதிக் கூட்டுதாபனத்திற்கும், சட்டதரணிகள் நிறுவனத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்திருக்கும் இடைக்கால நட்டஈட்டு அறிக்கைகளுக்கமைவாக இந்த இடைக்கால நட்டஈடு பெற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால நட்டஈடாக 8 இலட்சத்து 78 ஆயிரம் டொலர் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

கலிபோர்னியாவில் ஏலத்திற்றகு வரும் இங்கிலாந்து இளவரசி டயானாவின் உடைகள்!

  • August 30, 2023
  • 0 Comments

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா உடுத்திய 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வருகின்றன. அடுத்த மாதம் 6ம் திகதி முதல் 8ம் திகதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானா உடுத்திய கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன. 1997ம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார். அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் […]

பொழுதுபோக்கு

இணையத்தை கலக்கும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தனுஷ் நடிக்கும் காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது படக்குழுவில் இருந்து இரண்டு சூடான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. படத்தின் நாயகி பிரியங்கா மோகன் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் தலையில் துப்பாக்கியை வைத்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ், படத்திற்கான தனது வேலைகளை முடித்துவிட்டதாக உறுதிப்படுத்தினார். அதேபோல் நடிகர் ஜான் கோக்கனின் காட்சிகளும் மூடப்பட்டுவிட்டன, மேலும் அவரும் X இல் […]

பொழுதுபோக்கு

அதிரடியாக செயற்பட்டு பாதி இலங்கையை வாங்கிய சுபாஸ்கரன்

  • August 30, 2023
  • 0 Comments

லைக்கா நிறுவனம் இப்போது தமிழ் சினிமாவில் ஆணித்தரமாக கால் பதித்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் லைக்கா வருவதற்கு பல தடைகள் வந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களையும் தயாரித்து உள்ளார். இப்போது ரஜினியின் தலைவர் 170 படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. ஆனால் பல மாதங்கள் முன்பே அஜித்தின் விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் […]

இலங்கை

மீண்டும் ஒரு இனக்கலவரத்தை நோக்கி நகரும் இலங்கை அரசு – சிறீதரன்!

  • August 30, 2023
  • 0 Comments

இந்த நாடு மிகப் பெரிய இனக்கலவரத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொழும்பில் இருவகையான போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அங்கு தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் EPF,ETF குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது மலையக மக்கள் தான் எனவும், அரசாங்கம் இதை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் […]

error: Content is protected !!