இலங்கை

வணிக வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை – ஆளுநரே பொறுப்பு!!

  • September 1, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான சுற்றறிக்கைகள் சில வர்த்தக வங்கிகளுக்கு கிடைக்கவில்லை எனவும் அதற்கு மத்திய வங்கி ஆளுநரே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

உலகம்

பிரேசிலில் மகளுக்கு தாய் செய்த கொடூரம் – குளிர்சாதன பெட்டியில் மீட்கப்பட்ட உடல்

  • September 1, 2023
  • 0 Comments

பிரேசிலில் மகளை கொன்ற தாய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் தனது மகளை கொன்று உடலை பாகங்களாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒன்பது வயது சிறுமியின் உடல் உறுப்புகள் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சாவ் பாலோவில் உள்ள அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரூத் புளோரியானோ (30) என்ற பெண் ஒகஸ்ட் 26 அன்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரூத் புளோரியானோ என்ற பெண், […]

ஐரோப்பா

ரஷ்யா, சீனாவின் மடியில் விழக் கூடாது – விவேக் ராமசாமி!

  • September 1, 2023
  • 0 Comments

ரஷ்யா, சீனாவுடனான இராணுவ உறவுகளை முறித்துக்கொண்டால் மாத்திரமே பெய்ஜிங்கை எதிர்கொள்ள முடியும் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தற்போதைய கட்டுப்பாட்டுக் கோடுகளை முடக்குவதற்கு முன்வருவதாகவும், நேட்டோ உக்ரைனை அதனுள் அனுமதிக்காது, பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு கடினமான உறுதிமொழியை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். பதிலுக்கு, சீனாவுடனான தனது இராணுவக் கூட்டணியிலிருந்து ரஷ்யா […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு

நீண்ட கால கொவிட் தாக்கம் நினைவக இழப்பை ஏற்படுத்தும்!

  • September 1, 2023
  • 0 Comments

கோவிட் -19 க்குப் பிறகு மூளை மூடுபனி இரத்தக் கட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இந்த விடயம் வெளியாகியுள்ளது. கோவிட் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்படி  மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் எவ்வாறு உருவாகின்றன என்பது வெளிப்படுத்தப்பட்டதுடன். நீண்ட கால கொவிட் தாக்கங்கள் மூளையில் சோர்வை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறுப்பட்டுள்ளது. இந்த கட்டிகளின் உருவாக்கம் 16% மக்கள் தெளிவாக சிந்திக்கவும் கவனம் செலுத்தவும் […]

உலகம்

ஆயிரக்கணக்கான கணக்குகளை அகற்றிய Meta

  • September 1, 2023
  • 0 Comments

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான Meta ஆயிரக்கணக்கான போலியான கணக்குகளை அகற்றியுள்ளது. அந்தக் கணக்குகள் சீனாவிலிருந்து பரவும் தேவையற்ற மின்னஞ்சல் நடவடிக்கைகளோடு தொடர்புள்ளவை என தெரியவந்துள்ளது. “Spamouflage” என்னும் பெயரிலான நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 9,000 போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக Meta நிறுவன அறிக்கை குறிப்பிட்டது. அண்மை நடவடிக்கையின்கீழ் சீனாவைப் பெருமைப்படுத்தியும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சிறுமைப்படுத்தியும் பதிவுகள் பரப்பப்படுகின்றன. முடக்கப்பட்ட பொய்க் கணக்குகளில் சில, சீனாவின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகிறது. பொய்க் […]

ஐரோப்பா

இத்தாலி மிலான் நகரிலிருந்து சென்ற விமானத்தில் நேர்ந்த விபரீதம் – பலர் காயம்

  • September 1, 2023
  • 0 Comments

இத்தாலியின் மிலான் நகரிலிருந்து அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்றுகொண்டிருந்த Delta விமானம் ஆட்டங்கண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து 11 பயணிகளும் ஊழியர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். Delta 175 விமானம், கடுமையாக ஆட்டங்கண்டாலும் அது அட்லாண்டாவில் பத்திரமாகத் தரையிறங்கியதாக Delta நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிகள், ஊழியர்களைப் பார்த்துக்கொள்வது தான் எங்கள் முன்னுரிமை” என்றும் அவர் கூறினார். விமானத்தில் மொத்தம் 151 பயணிகளும் 14 ஊழியர்களும் இருந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11 பேரைத் தவிர்த்து […]

இலங்கை

இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு!

  • September 1, 2023
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த விலை உயர்வு நேற்று (31.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்   விலை 13  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாவாகும். அதேபோல் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின்  விலை 42 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 417 ரூபாவாகும். ஆட்டோ டீசலின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பேர்

  • September 1, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான எஸன் நகரத்தில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கடந்த 29ஆம் திகதி எஸன் நகரத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது 67 வயதுடைய வாகன சாரதியானவர் டிராம் ஒன்று வந்திருந்த பொழுது அதனுடன் மோதியதாக தெரியவந்துள்ளது. இதன் காரணத்தினால் இந்த வாகன சாரதியானவர் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது. இந்த டிராம் பயணம் செய்த வீதி ஹல்டன் டுரோப்ஃ என்று சொல்லப்படுகின்ற வீதியானது பல […]

இலங்கை

இலங்கைக்கு 6900 வாகனங்கள் வாகனங்கள் இறக்குமதி – வெளிவந்த முக்கிய தகவல்

  • September 1, 2023
  • 0 Comments

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். நேற்று மாலை யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவற்றில் 3,000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டுவரப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜீப்கள் என குறிப்பிட்டார். ஆம்புலன்ஸ்கள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான […]

ஆசியா செய்தி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈரான் மரண தண்டனை கைதி மருத்துவமனையில் மரணம்

  • August 31, 2023
  • 0 Comments

அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஈரான் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஈரானிய நபர் ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார். ஜாவத் ரூஹி கடந்த ஆண்டு “முறையற்ற” ஹிஜாப் அணிந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி காவலில் இறந்ததால் தூண்டப்பட்ட போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டார். 35 வயதான திரு ரூஹி, சிறையில் வலிப்புத்தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவரது மரணத்திற்கு அதிகாரிகளே பொறுப்பு என்று […]

error: Content is protected !!