இத்தாலி மிலான் நகரிலிருந்து சென்ற விமானத்தில் நேர்ந்த விபரீதம் – பலர் காயம்
இத்தாலியின் மிலான் நகரிலிருந்து அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்றுகொண்டிருந்த Delta விமானம் ஆட்டங்கண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து 11 பயணிகளும் ஊழியர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Delta 175 விமானம், கடுமையாக ஆட்டங்கண்டாலும் அது அட்லாண்டாவில் பத்திரமாகத் தரையிறங்கியதாக Delta நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிகள், ஊழியர்களைப் பார்த்துக்கொள்வது தான் எங்கள் முன்னுரிமை” என்றும் அவர் கூறினார்.
விமானத்தில் மொத்தம் 151 பயணிகளும் 14 ஊழியர்களும் இருந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11 பேரைத் தவிர்த்து எத்தனைப் பேர் காயமுற்றனர் என்பது தெரியவில்லை.
மருத்துவமனையில் உள்ளவர்களின் உடல்நிலை பற்றியும் தகவல் இல்லை.
(Visited 4 times, 1 visits today)