இலங்கை

அம்பாறையில் மாணவியிடம் மாதவிடாய் தகவல் திரட்டிய அதிபருக்கு நேர்ந்த கதி!

  • September 1, 2023
  • 0 Comments

பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு..!

  • September 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13ம் திகதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான […]

இலங்கை

QR முறைமை தொடர்பில் அமைச்சரின் விசேட அறிவிப்பு!

தற்போதுள்ள தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு (QR) முறை இன்று (செப். 01) முதல் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு விடையளிக்கும் வகையில் 2022 ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பொழுதுபோக்கு

மறக்க முடியாத “சித்தார்த் அபிமன்யூ” தனி ஒருவன் 2 புதிய வில்லன் இவரா?

  • September 1, 2023
  • 0 Comments

நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி என முன்னணி நடிகர்கள் இணைந்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது தனி ஒருவன். 8 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் கேரியர் அவரது அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தில்தான் துவங்கியது. தொடர்ந்து மற்ற முன்னணி இயக்குநர்களின் டைரக்ஷனிலும் நடித்து தன்னை மாஸ் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அவரது அண்ணன் […]

பொழுதுபோக்கு

அமெரிக்காவில் நடிகர் விஜய்… வெங்கட் பிரபு ட்வீட்…

  • September 1, 2023
  • 0 Comments

‘தளபதி 68’ படத்திற்காக அமெரிக்காவில் உள்ள கிரியேட்டிவ் ஸ்டுடியோ ஒன்றில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகின்றது. ‘லியோ’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 68’ என அழைக்கப்படும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் அப்பா – மகன் என்று இரண்டு மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் […]

இலங்கை

திருகோணமலை கன்னியா பகுதியில் வாகன விபத்து- மூவருக்கு காயம்!

  • September 1, 2023
  • 0 Comments

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரச பஸ் கல் குவாரிக்கு அருகில் சுற்றுலா வந்த பஸ் ஒன்று திருப்ப முயற்சித்த போது விபத்துக்குள்ளானதாகவும் இதனால் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்விபத்து இன்று (01) 11. 30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர். கன்னியாவிற்கு சுற்றுலா சென்ற தனியார் பஸ் […]

மத்திய கிழக்கு

மொராக்கோவில் ஜெட் ஸ்கீயிங் செய்தபோது எல்லை தாண்டிய இருவர் சுட்டுக் கொலை!

  • September 1, 2023
  • 0 Comments

மத்திய தரைக்கடல் நாடான மொராக்கோவின் சைடியாவில் உள்ள கடற்பகுதியில், ஜெட் ஸ்கீயிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள கடற்கரை ரிசாட்டில் இருந்து புறப்பட்டு ஜெட் ஸ்கீயிங் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வழிதவறி அண்டைநாடான அல்ஜீரிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அவர்களை நோக்கி அல்ஜீரிய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் பிலால் கிஸ்ஸி மற்றும் அப்தெலாலி மெர்சவுர் ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்மெயில் […]

பொழுதுபோக்கு

இளம் நடிகை தற்கொலை… பெற்றோர் அதிர்ச்சி

  • September 1, 2023
  • 0 Comments

கேரள மாநிலம் மலப்புரம் தென்ஹிபாலம் பகுதியை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர் (வயது31). இவர் மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மாடலிங் துறையில் இருந்துவந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு […]

ஐரோப்பா

பிரித்தானிய சிறுமி சாரா கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..!

  • September 1, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மாயமானதாக கூறப்படும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை 5 நாட்களுக்கு பின்னர் தான் பொலிஸார் தேடத் தொடங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி சாரா ஷெரீப் கொலை வழக்கில் தற்போது மாயமாகியுள்ள மூவருக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆயுளுக்கும் ஒளிந்திருக்க முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.சிறுமி சாரா கொலை வழக்கு தொடர்பில் தற்போது பாகிஸ்தானில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ம் திகதி Woking பகுதியில் உள்ள குடியிருப்பு […]

இலங்கை

கொக்குதொடுவாய் விவகாரத்தில் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்

  • September 1, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்கு கொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இன்று(31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பாக இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள […]

error: Content is protected !!