இலங்கை

யாழில் ஆசிரியரொருவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை(01) காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளனர் . பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பெற்றோரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்பட்டதாக தெரிவித்தே பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் சங்கமொன்றினை பயன்படுத்தி தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு பாடசாலைக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்வதாக […]

இலங்கை

களனி பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்!

  • September 1, 2023
  • 0 Comments

உத்தரவை மீறி ஓடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். களனிமுல்லை பாலத்தில் விசேட பணியொன்றில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழுவினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்லப்பட்டதுடன், நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இருப்பினும் குறித்த நபர் அதிரடிபடையினரின் சைகையை மீறி வாகனம் செலுத்திய நிலையில், துப்பாகி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

மெனிங்கோகோகல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • September 1, 2023
  • 0 Comments

கொழும்பு மாவட்டத்தில் மெனிங்கோகோகல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, அந்நோய் அறிகுறிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், குளிர், சோர்வு, வாந்தி, கை மற்றும் பாதங்களில் குளிருணர்வு போன்ற அறிகுறிகள் மெனிங்கோகோகல் நோயின் பொதுவான அறிகுறிகளாகும் என அவர்கள் கூறியுள்ளனர். ரத்மலானையில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணிபுரிபவரும் ஜா-எல, நிவாங்கமவையில் வசிப்பவருமான 49 வயதுடைய ஒருவரே மெனிங்கோகோகல் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளார்.  இந்த நோய் முதலாவதாக காலி சிறைச்சாலையில் கண்டறியப்பட்டது. இந்நோயாளி […]

பொழுதுபோக்கு

இலங்கை வருகின்றார் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

  • September 1, 2023
  • 0 Comments

பிரபல தென்னிந்திய நடிகரான டக்குபதி வெங்கடேஷ், தனது அடுத்த தெலுங்கு திரைப்படத்திற்கான அட்டவணையின் ஒரு பகுதியாக படப்பிடிப்பிற்கு இலங்கை வரவுள்ளார். தகவல்களின்படி, வெங்கடேஷ் மற்றும் 14 முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். நடிகர்களான நவாசுதீன் சித்திக் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்களின் வருகை மற்றும் அட்டவணைக்கான தயாரிப்பு பணிகள் இலங்கையின் ஐங்கரன் மீடியா சொல்யூஷன்ஸால் நிர்வகிக்கப்படுகிறது. அண்மைக் காலங்களில் பல இந்திய நடிகர்கள் தனிப்பட்ட மற்றும் […]

இலங்கை

அடிப்படை மருந்துகள் கூட இல்லாத நிலை: அதிகளவிலான மரணங்கள் சம்பவிக்கலாம்- வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

மூதூர் தள வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாமையினால் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை-மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டொக்டர் இளங்கோவன் செந்தூரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர் கடமையில் இருப்பதாகவும் இதனால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்டுள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் பத்து விசேட வைத்தியர்களும், 20 […]

பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் சாதனை! சூப்பர் ஸ்டாரை சந்தித்த கலாநிதி மாறன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் என்டர்டெயின்னர் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனது. கடைசி அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜெயிலர் ரூ 525 கோடியை கடந்துள்ளது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 600 கோடியை நோக்கி ஓடுகிறது. சன் பிக்சர்ஸ் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக அதிக லாபம் ஈட்டிய திரைப்படம் ஜெயிலர். அதன் காரணமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார், […]

இலங்கை

02 நாள் பயணமாக இலங்கை வருகிறார் ராஜ்நாத் சிங்!

  • September 1, 2023
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மறுஆய்வு செய்வதற்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், நாளைய தினம் (02.09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். வரும் 03 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு விடயங்களை ஆய்வு செய்வார் எனக்  கூறப்படுகிறது. அத்துடன் இலங்கையின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளின் முழு வரம்பு […]

உலகம்

தீவிரமடையும் உக்ரைன் போர்! ரஷ்யாவிற்குள் இருந்து ரஷ்யா எதிர்கொண்ட மோசமான தாக்குதல்?

ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது, ரஷ்யாவிற்குள் இருந்து நடத்தப்பட்டதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை உக்ரைன் அல்லது ரஷ்ய அதிரடிப்படையினர் நடத்தியதா என்பதை புடானோவ் கூறவில்லை. ரஷ்யா மீது உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி நிகழ்கின்றன. பிஸ்கோவ் தாக்குதலை ஏற்கனவே ஒப்புக்கொண்டது. ஆனால் புடானோவின் கருத்துக்கள் இது ஒரு நீண்ட தூர ஆயுதத்தால் ஏற்பட்டது என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி […]

இந்தியா

மத்திய பிரதேசத்தில் பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய கடை உரிமையாளர்கள்!

  • September 1, 2023
  • 0 Comments

மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் சிலர், ஒரு பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்துள்ளார். அங்கு அமரக்கூடாது எனக் கூறி ஒருவர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். மற்றொருவர் அந்த பெண்ணை எட்டி உதைத்துள்ளார். வலி தாங்காமல் அழுத அந்த பெண்ணை இன்னொருவர் […]

வட அமெரிக்கா

கனடிய பாடசாலையில் தமிழர் ஒருவரின் முகஞ்சுழிக்கவைக்கும் செயல்

  • September 1, 2023
  • 0 Comments

ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.50 வயதான நபர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாடசாலையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழர் மீதே இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஆரம்பத்தில் குற்றச் செயல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 18ம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துளள்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த தமிழர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர் […]

error: Content is protected !!