அரசியல் இலங்கை செய்தி

அநுரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை: மஹிந்த அணி வியூகம்!

  • December 12, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். “   பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட  இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது. இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

முள்ளிக்குளத்தில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி!

  • December 12, 2025
  • 0 Comments

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு கண்காணிப்பு காலத்துடன், கட்டமைத்தல்-சொந்தமாக்குதல்-செயல்படுத்துதல் மாதிரியின் கீழ் செயற்படுத்தப்படும் 100 மெகாவாட் திறன் கொண்ட முள்ளிக்குளம் காற்றாலை மின் பூங்காவுக்கு தனியார் துறை முதலீட்டாளர்களிடம் முன்மொழிவுகளை கோர […]

உலகம்

எல்லைப் பிரச்சினை – தாய்லாந்தில் பாராளுமன்றம் கலைப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

கம்போடியாவுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்து அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளது. மேலும் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆணையில், பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) தனது சிறுபான்மை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து கட்டுப்படுத்த போராடி வரும் பிற சவால்களில் கொடிய எல்லைப் பிரச்சினையையும் மேற்கோள் காட்டினார். பாராளுமன்றத்தைக் கலைப்பதே பொருத்தமான தீர்வு. […]

ஆஸ்திரேலியா இலங்கை செய்தி விளையாட்டு

U-19 ஆஸி அணியில் இரு இலங்கை வீரர்கள்!

  • December 12, 2025
  • 0 Comments

2026 இல் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐசிசி உலகிக் கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணி விபரத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். நாதன் குரே, நிதேஸ் சாமுவேல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் நியூ சவூத் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்தியா மற்றும் சீனா வம்சாவளி வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் உள்ள பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான கிரிக்கெட் உலகக்கிண்ண தொடர் நமீபியா மற்றும் சிம்பாப்வே […]

இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு: டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டு அறிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

“ டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ  நம்பிக்கை வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “ சில நிறுவனங்களால் உத்தேச […]

இலங்கை செய்தி

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

  • December 12, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இடர் நிலைமையால் பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாத பட்சத்தில் பாடசாலை அதிபருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமையை எதிர்கொண்டிருந்தால் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்.

இலங்கை செய்தி

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மன்னாரில் 3 நாள் சிகிச்சை

  • December 12, 2025
  • 0 Comments

டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மன்னாரில் நாளை முதல் மூன்று நாள் நடமாடும் கால்நடை மருத்துவ சேவையை தொடங்குவதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத் தலைவர் டொக்டர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கால்நடைகளைப் பராமரிக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். வேளாண்மை, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை (DAPH) மற்றும் அரசு […]

உலகம் செய்தி

வெனிசுலா கடற்கரையில் மிகப்பெரிய எண்ணெய் டேங்கரை கைப்பற்றியது அமெரிக்கா

  • December 11, 2025
  • 0 Comments

வெனிசுலா கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதால், நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. “இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய டேங்கர்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசு வெளியிட்ட காட்சிகளில் ஆயுத வீரர்கள் கப்பலில் ஏறுவது தெரிகிறது. இந்த டேங்கர் வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து அனுமதிக்கப்பட்ட எண்ணெயை எடுத்துச் சென்றதாக அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி தெரிவித்துள்ளார். கராகஸ் இந்த […]

உலகம் செய்தி

அமெரிக்கா, கனடாவில் இலட்சக்கணக்கானோருக்கு வெளியேற்ற உத்தரவு.

  • December 11, 2025
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் கனடாவின் பசிபிக் வடமேற்குப் பகுதிகளில், ‘அட்மாஸ்பியரிக் ஆறு’ (atmospheric river)எனப்படும் நீராவி நீரோட்டம் காரணமாகப் பெய்து வரும் கனமழையால், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அமெரிக்காவின் ஒரிகன் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில், ஸ்காகிட் மற்றும் ஸ்னோஹோமிஷ் ஆறுகளின் பகுதிகளில் பேரழிவுகரமான வெள்ளம் ஏற்படலாம் என வானிலை சேவை எச்சரித்துள்ளது. வாஷிங்டன் ஆளுநர் பாப் ஃபெர்குசன் நேற்று மாநில அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். சுமார் ஒரு இலட்சம் மக்கள் விரைவில் வெளியேற்ற […]

உலகம் செய்தி

தவறுதலாக நாடு கடத்தப்பட்டவர் மீண்டும் சிறைப்பிடிப்பு: உடனடியாக விடுவிக்க நீதிபதி உத்தரவு

  • December 11, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து தவறுதலாக நாடு கடத்தப்பட்டு, பின்னர் மீண்டும் அழைத்து வரப்பட்ட கில்மர் அப்ரேகோ கார்சியா என்பவரை, குடிவரவுத் தடுப்பிலிருந்து (Immigration Custody) உடனடியாக விடுவிக்க மேரிலாந்து ஃபெடரல் நீதிபதி பவுலா சின்னிஸ் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் எல் சால்வடார் சிறைக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட இவர், மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்ட பின் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நீதிபதி சின்னிஸ் தனது உத்தரவில், அப்ரேகோவை மீண்டும் தடுத்து வைத்தது சட்டப்பூர்வ அதிகாரம் […]

error: Content is protected !!