இலங்கை செய்தி

பேரிடரால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 12, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12 ) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 211 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 713 வீடுகள் முழமையாகவும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 805 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரணில் ஏன் நிவாரணம் வழங்கவில்லை?

  • December 12, 2025
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவராவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பை அவர் நடத்தினார். இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்திரிக்கா நிதி உதவி வழங்கியுள்ளார். ரணில் என்ன செய்தார் என அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன கூறியவை வருமாறு, “ ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவர். எனவே, அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சொத்துகளை […]

இலங்கை

சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – NBRO எச்சரிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும்  ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதால், பொதுமக்கள் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மூத்த புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்குப் கருத்து வெளியிட்ட அவர்,  நான்கு மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு  சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அபாயங்கள் இருந்தபோதிலும், வார இறுதி சுற்றுலாக்களுக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வருவதாக சுட்டிக்காட்டிய அவர்  […]

இலங்கை

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இலங்கையில் தங்கத்தின் விலையும் அதனுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. இதன்படி உலக சந்தையில் இன்றை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை  $4,266 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய இலங்கையில்   நேற்றைய விலையுடன்  ஒப்பிடும்போது  இன்று  பவுண் ஒன்றின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில்   22 காரட் பவுண் ஒன்றின்விலை  312,000 ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில்,  24 காரட் பவுண் ஒன்றின்விலை,  339,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

உலகம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் மோசடி – பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!

  • December 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் மெய்நிகர் கடத்தல் மோசடி அதிகரித்து வருவதாக FBI அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருடி, பணம் கோருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, அன்புக்குரியவரை கடத்தியதாக பொய் கூறி கப்பம் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மோசடியான அழைப்புகள், அல்லது செய்திகள் கிடைக்கப்பெற்றால் அதனை உறுதிப்படுத்துவதற்காக அன்புக்குறியவர்களுடன் பேசும், பிரத்தியேக வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். […]

இலங்கை

இரவு நேரங்களில் நுவரெலியாவிற்கு பயணிப்பதை தவிர்க்கவும்! காணொளி இணைப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

மோசமான வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால், இரவு நேரங்களில் நுவரெலியாவிற்குள்   செல்லும் சாலைகளை வாகன சாரதிகள் இயன்றளவு தவிர்த்துக்கொள்ளுமாறு   வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் செயலாளர் துஷாரி தென்னகோன் நேற்று இதனை வலியுறுத்தினார். கம்பளை-நுவரெலியா பிரதான சாலையில் புதிதாக மண்மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதி சமீபத்தில்தான் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் நிலையற்ற நிலைமைகள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்துகின்றன என்று அவர் […]

உலகம் செய்தி

வெனிசுலா ஜனாதிபதிமீது ட்ரம்ப் பொருளாதார போர் தொடுப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் மூன்று மருகமன்மார்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்நிலையிலேயே வெனிசுலாமீதான அடுத்தக்கட்ட அடியாக மேற்படி பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட மருமகன்களில் இருவர் அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றவர்கள். எனினும், கைதிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். வெனிசுலாவுடன் தொடர்பை பேணும் ஆறு கப்பல் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

ஜப்பானில் மீண்டும் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

  • December 12, 2025
  • 0 Comments

ஜப்பானின் வடகிழக்கில் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளது. ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவின் (Honshu) வடக்கே உள்ள அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில், இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ (Hokkaido), அமோரி (Aomori), இவாட் (Iwate) மற்றும் மியாகி (Miyagi) மாகாணங்களில் 1 மீட்டர் (3.2 அடி) வரை சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

உலகம் செய்தி

கலிபோர்னியாவின் (California) தெற்கு எல்லையில் இராணுவ மண்டலத்தை நிறுவிய ட்ரம்ப்!

  • December 12, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவின் (California) தெற்கு எல்லையில் புதிய இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை ட்ரம்ப் நிர்வாகம் நிறுவியுள்ளது. சான் டியாகோ (San Diego) மற்றும் இம்பீரியல் (Imperial) மாவட்டங்களில் உள்ள 760 ஏக்கர்நிலத்தின் அதிகார வரம்பை மூன்று ஆண்டுகளுக்கு கடற்படைக்கு மாற்றுவதாக உள்துறைத் துறை அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத எல்லைக் கடப்பு பகுதிகளை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெக்சாஸ் (Texas), நியூ மெக்ஸிகோ (New Mexico)  மற்றும் அரிசோனாவில் (Arizona) அமைக்கப்பட்ட இந்த  […]

ஐரோப்பா செய்தி

உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பை பலப்படுத்தும் இங்கிலாந்து!

  • December 12, 2025
  • 0 Comments

வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இங்கிலாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் அதன் உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்புடைய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ரோயல் கடற்படை, பிரித்தானிய இராணுவம், ரோயல் விமானப்படை, இங்கிலாந்து விண்வெளி கட்டளை மற்றும் நிரந்தர கூட்டுத் தலைமையகத்தின் பிரிவுகளை ஒன்றிணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலம், கடல், வான், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றிலிருந்து தகவல்களைச் சேகரிப்பதை விரைவுபடுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 […]

error: Content is protected !!