இலங்கை

நெல் வயல் ஒன்றின் நடுவில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!

  • September 6, 2023
  • 0 Comments

நிகவெரட்டிய நகர் பகுதியை அண்மித்த நெல் வயல் ஒன்றின் நடுவில் இருந்து நிர்வாணமாக காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் ஒன்று புதன்கிழமை (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 40 – 45 மதிக்கத்தக்க வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு நிர்வாணமாக காணப்பட்டதுடன், அந்த சடலம் யாருடையது என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த சடலம் வெளிப் பிரதேசத்தில் இருந்து கொலை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு குறித்த […]

ஆசியா

பாகிஸ்தானில் மதபோதகர் மீது துப்பாக்கிச்சூடு..!

  • September 6, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்கள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா தாசில் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் மதபோதகராக செயல்பட்டு வருபவர் எலேசர் விக்கி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டு தலத்திற்கு […]

ஐரோப்பா

வாக்னர்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்கவுள்ள பிரித்தானியா

  • September 6, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவாக அறிவிக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது என்பது சட்டவிரோதமானது என கூறப்படுகிறது. வாக்னர் கூலிப்படையை வன்முறையை தூண்டும் அழிவுகரமான அமைப்பு என குறிப்பிட்டுள்ள உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன், ரஷ்யாவின் வெறும் ஒரு ராணுவ கருவி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைனிலும் ஆப்பிரிக்காவிலும் அதன் செயற்பாடுகள் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் சுயெல்லா பிரேவர்மேன் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் […]

இலங்கை

இறக்குமதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்!

  • September 6, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர இறக்குமதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். கோப் குழு நேற்று (05.09) கூடிய நிலையில், இதன் முன் முன்னிலையான அதிகாரிகள் மேற்படி தெரிவித்துள்ளனர். இதன்போது கோதுமை மா மற்றும்  ஓடு தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய இரட்டைக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு எவ்வளவு காலம் இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று பொது நிதிக் குழு (COPF) கேள்வி எழுப்பியது. அதற்கு […]

இலங்கை

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க யோசனை!

  • September 6, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டு வருவதாக மின் பாவணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பிரேணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கோருவதாக அந்த சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக கேட்டுக்கொண்டுள்ளார். IMF இன் நிபந்தணைகளுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது. இதற்கமைய முன்னதாக ஒருமுறை மின்கட்டணத்தை அதிகரிக்க முயற்சித்தும், பின்னர் அது […]

வட அமெரிக்கா

வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா…

  • September 6, 2023
  • 0 Comments

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் இம்மாதம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச […]

இலங்கை

இன்று காலை ஆரம்பமான கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி (photos)

  • September 6, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (06.09.2023) ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதற்கமைய காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது. குறித்த சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் […]

இந்தியா பொழுதுபோக்கு

நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸபந்தனா காலமானார்?

  • September 6, 2023
  • 0 Comments

நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸபந்தனா திடீரென காலமானார் என்ற பொய்யான தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி அவர்  நன்றாக இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளது. சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளது. 40 வயதான அவர், பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

இலங்கை

முன்னறிவிப்பு இன்றி விடுப்பு எடுக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

  • September 6, 2023
  • 0 Comments

முன்னறிவிப்பு இன்றி வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06.09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வைத்திய நிபுணர் விடுப்பு எடுத்ததன் காரணமாக பல சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட மகன் – பல வருடங்களாக காத்திருக்கும் தந்தையின் கோரிக்கை

  • September 6, 2023
  • 0 Comments

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் பதினேழு ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தையார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தார். கல்வியங்காட்டில் உள்ள இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே தந்தையார் சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

error: Content is protected !!