இலங்கை

முல்லைத்தீவில் கைக்குண்டு வெடித்தத்தில் இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் – நீதிபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 7 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்துள்ள புகைப்படம்!

  • September 7, 2023
  • 0 Comments

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் கடந்த 02 ஆம் திகதி அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ரொக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்று புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தில் […]

பொழுதுபோக்கு

மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • September 7, 2023
  • 0 Comments

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீனா. தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது மிஸ் ஆகி இருந்தாலும், ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் ‘சரக்கு வச்சிருக்கேன்’ என்கிற பாடலுக்கு அசத்தலான ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். மீனா 30 வயதை கடந்த பின்னர், சினிமா வாய்ப்புகள் குறைய துவங்கியது. எனவே… […]

இலங்கை

பயாகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் வைத்தியசாலையில்!

  • September 7, 2023
  • 0 Comments

பயாகல  பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவத்துள்ளன. உணவு விஷமானமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுகவீனமடைந்தவர்களில், இலஞ்ச ஒழிப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள், பெண்கள் உள்பட  பல பொலிஸ் அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

பாதுகாப்பு செயலாளரினால் வெளியிடப்பட்ட இரண்டு புதிய இலக்கிய புத்தகங்கள் மற்றும் பாடல்!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) எழுதிய இரண்டு புதிய இலக்கியப் படைப்புகள் மற்றும் ஒரு பாடல் நேற்று (செப். 06) கொழும்பில் நடைபெற்ற விழாவின் போது வெளியிடப்பட்டது. கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜெனரல் குணரத்னவினால் எழுதப்பட்ட இரண்டு புதிய இலக்கியப் படைப்புகள் “தரகே அகமனய” (Tharage Agamanaya) மற்றும் “காதோல் அத்து” (Kadol Aththu) (மொழிபெயர்ப்பு) […]

இலங்கை

மொரந்துடுவ பிரதேசத்தில் பெண்களிடம் அத்துமீறிய போலி பொலிஸ்

  • September 7, 2023
  • 0 Comments

வலான ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் மொரந்துடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்தோடு பெண்களிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் சந்தேகநபர் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் குருநாகல் வீரம்புகெதர பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஹங்வெல்ல, தெடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு செல்ல தயார்!

  • September 7, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உள்ளுர் விசாரணைக்கு அன்றி சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07.09) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது புலம்பெயர் மக்கள் […]

ஐரோப்பா

உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணை;கண்டனம் வெளியிட்டுள்ள ரஷ்யா

  • September 7, 2023
  • 0 Comments

உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது . உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர்மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. மேலும் பிளிங்கென் […]

இலங்கை

பேருந்தில் பயணித்த பெண்னொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை ​நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தை நிறுத்திவிட்டு அதில் ஏறி குறித்த பெண்ணை சுட்டுள்ளனர். இதனை அடுத்து காயமடைந்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தென் அமெரிக்கா

பிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்…! பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

  • September 7, 2023
  • 0 Comments

பிரேசிலில் கடந்த திங்கள்கிழமை இரவு பெரும் புயல் ஒன்று தாக்கியது. இதனால் அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டன. புயலால் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்களை மீட்புப் படை வீரர்கள் மீட்டு உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை […]

error: Content is protected !!