பொழுதுபோக்கு

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன், ஜோதிகா… இவர்களுடன் அஜய்

  • September 8, 2023
  • 0 Comments

மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர். விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் 2024 ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவனும், ஜோதிகாவும் […]

இலங்கை

வவுனியாவில் திடீரென மாயமாகிய சிறுமியின் சடலம்!

  • September 8, 2023
  • 0 Comments

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் சடலம்  திடீரென மாயமாகியுள்ளது. கடந்த மாதத்தில் வவுனியா நெளுக்கும் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உறவினர்கள் இராசேந்திர குளம் பகுதியில் உள்ள மயானத்தில உடலை புதைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது சிறுமியின் சடலம்  இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   […]

ஆசியா

சீனாவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய புதிய சட்டம்!

  • September 8, 2023
  • 0 Comments

சீன சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகளையும் ஆடைகளையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்தின் நகல் வரைவு சீனாவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் நடப்புக்கு வந்தால் பிடிபடுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றர். விதிமீறல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. சீன தேசத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் ஆடைகளை அணிவோர் 15 நாள்கள் வரை சிறையிலடைக்கப்படலாம். அவர்களுக்கு 680 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம். தேசத்தின் உணர்வுகள் புண்படுவதை அதிகாரிகள் எப்படி நிர்ணயிக்க முடியும் என்று […]

இலங்கை

சுரேஷ் சாலே ராஜபக்ஷக்களின் குடும்ப பாதுகாவலன் – சரத் பொன்சேக்கா!

  • September 8, 2023
  • 0 Comments

புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சாலே ராஜபக்ஷக்களின் குடும்ப பாதுகாவலன் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (07.09) இடம்பெற்ற கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் -04 வெளியிட்டுள்ள காணொலி குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பது பயனற்றது. ஆகவே சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். […]

பொழுதுபோக்கு

BREAKING; பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து திடீர் மரணம்

  • September 8, 2023
  • 0 Comments

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து சற்றுமுன் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு உயிரிழக்கும் போது 57 வயது என தெரிவிக்கப்படுகின்றது. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பிரபலமானவர் மாரிமுத்து. இவர் இயக்குநர் என்பதை கடந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இன்று தொலைகாட்சி தொடருக்கு டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இது அவரது ரசிகர்கள் […]

ஐரோப்பா

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் ஜனாதிபதி

  • September 8, 2023
  • 0 Comments

ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என அவர் தீர்மானித்துள்ளார். அதன்படி, இம்முறை ஜி20 மாநாட்டில் ஸ்பெயின் சார்பில் துணை ஜனாதிபதி நாடியா கால்வினோ சான்டாமரியா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஸ்பெயினின் […]

இலங்கை

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் கணிசமாக வீழ்ச்சி!

  • September 8, 2023
  • 0 Comments

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தல் 3598 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கடந்த ஜுலை மாதத்துடுன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழ்வியல்

ஒற்றைத் தலைவலிக்கான காரணம் – தற்காத்துக் கொள்வது எப்படி?

  • September 8, 2023
  • 0 Comments

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி ஆண்களை விட, பெண்களையே அதிகம் தாக்குகிறது. இது சாதாரண தலைவலி போல் இருக்காது. பெரும்பாலும் தைலம் தடவினாலோ, மாத்திரை போட்டாலோ ஒரு மணி நேரத்தில் சரியாகும் தலைவலி போல இல்லாமல், ஒற்றைத் தலைவலி ஒரு நாள் முழுக்கவோ அல்லது இரண்டு நாள் முழுக்கவோ பாடாய்ப்படுத்தி விட்டுத்தான் ஓயும். எட்டு வருடங்களாக என்னுடன் கைகோர்த்துக்கொண்ட மைக்ரேன், மாதம் ஒரு முறையோ இரு முறையோ அழையா விருந்தாளியாக வந்து என்னுடன் தங்கி விடும். அப்போதெல்லாம் வாந்தி, […]

ஆசியா

நீருக்கடியில் அணுசக்தி கப்பல் சோதனையை மேற்கொண்ட வடகொரியா!

  • September 8, 2023
  • 0 Comments

வட கொரியா தனது முதல் செயல்பாட்டு “தந்திரோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலை இன்று (08.09) ஏவி சோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு, ஹீரோ கிம் குன் ஓகே என வடகொரியா பெயர் சூட்டியுள்ளது.  நீருக்கடியில் தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இது முக்கிய பங்களிப்பு என வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த கப்பலை 1970 ஆம் ஆண்டு  சீனாவிடமிருந்து வட கொரியா கொள்வனவு செய்திருந்தது. இந்நிலையில் சோதனைகள் நிறைவடைந்த பின்னர், கடற்படைக்கு […]

ஆப்பிரிக்கா

கென்யாவில் குழந்தையை திருடி விற்ற மருத்துவமனை ஊழியரால் அதிர்ச்சி

  • September 8, 2023
  • 0 Comments

மருத்துவமனை ஊழியர் ஒருவர் குழந்தையைக் கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் – நைரோபி நகரின் Mama Lucy Kibaki மருத்துவமனையில் பணிபுரிந்த Fred Leparan குழந்தையை விற்க ஒப்புக்கொண்டது. மருத்துவமனையின் பராமரிப்பிலிருந்த ஆண் குழந்தையை அவர் 2,500 டொலருக்கு விற்க ஒப்புக்கொண்டார். BBC Africa Eye விசாரணைக்குப் பின் அவர் 2020ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை ஊழியர் செலினா அவூர் (Selina Awour) மீதும் குழந்தை புறக்கணிப்புக்காக 3 குற்றச்சாட்டுகள் […]

error: Content is protected !!