பரீட்சைக்கு தயாராவது கடினம் – இலங்கை மாணவர்கள் விடுக்கும் கோரிக்கை
எதிர்வரும் 2 மாதங்களில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தயாராவது கடினம் என மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 2022ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், தயாராகுவது கடினம் என தெரிவித்து்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பரீட்சைக்குத் தயாராவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]













