நல்லூர் திருவிழாவில் கடுமையான நெரிசல் – பலர் வைத்தியசாலையில்
யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் தீடீர் நெருக்கடி ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட நெரிசலால் சற்று பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பக்தர்கள் வருகை தரவும் போவதற்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்டது. இந்த நிலையில் மற்றைய சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலத்தப்படாத நிலையில் நெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் அம்புலன்ஸ் […]













