கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஏழாம் நாள் அகழ்வு.: மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஏழாவதுநாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் (13) இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன. இந்நிலையில் ஏழுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 9மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த அகழ்வாய்வு பணிகளுக்கென, 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அந்த நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி கடந்தவாரம் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள முடிந்ததுடன், […]













