ஐரோப்பா

ஜெர்மனியில் சிறுவனின் உயிரை பறித்த TikTok சவால் – பொலிஸார் எச்சரிக்கை

  • September 14, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 17 வயதுடைய சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் கோஸ்வெல் என்ற பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் இடம் பெற்றுள்ளது. 17 வயதுடைய சிறுவன் ஒருவர் டிக்டொக் மோகத்ததால் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது அண்மை காலங்களில் டியுரோன் என்று சொல்லப்படுகின்ற வாசனை திரவங்களை யார் கூடுதலாக சுவாசிப்பார் என்ற சவால் ஒன்று டிக்டொக் என்று சொல்லப்படும் சமூக வலைதளங்களில் பிரபல்யமடைந்து வருகின்றது. அதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டு TikTok செயலியில் வெளியிடுவது […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு விசேட கோரிக்கை

  • September 14, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் நாடு முழுவதும் PWS சைரன்கள் மூலம் முக்கிய தகவல் ஒலியை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை எழுப்பும் என தெரிவிக்கப்படுகின்றது நாளைய தினம் மாலை 6.20 மணிக்கு, இந்த ஒலி எழுப்பப்படும் என குறிப்பிடப்படுகின்றது. ஆண்டு தோறும் பெப்ரவரி 15ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 15ஆம் திகதி ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு தீவு முழுவதும் இந்த பொது எச்சரிக்கை ஒலியை SCDF எழுப்பும் என்பது வழமையாகும். SGSecure செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட கைப்பேசி […]

உலகம்

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம் – தேன்நிலவுக்குச் சென்ற பிரான்ஸ் தம்பதி பலி

  • September 14, 2023
  • 0 Comments

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுதியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களில் நான்கு பிரெஞ்சு நாட்டவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3000க்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 3000 பேர்காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நால்வர் பிரெஞ்சு நாட்டவர் என தெரியவந்துள்ளது. தேன்நிலவுக்காக அங்கு பயணித்திருந்த இரண்டு இளம் தம்பதிகளும் அவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் Meaux நகரில் வசிக்கும் அவர்கள் நிலநடுக்கம் இடம்பெறுவதற்கு இருநாட்கள் முன்னதாக மொராக்கோவின் Marrakech நகருக்குபயணித்திருந்தனர்.

இலங்கை

இலங்கையில் 8 வருடங்கள் சக்கர நாற்காலியில் பாடசாலை சென்ற மாணவியின் சாதனை

  • September 14, 2023
  • 0 Comments

பாணந்துறை எட்டு வருட காலம் சக்கர நாற்காலியில் பாடசாலை சென்ற மாணவி உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார். பாணந்துறை அகமெதி பாலிகா தேசிய பாடசாலையின் (மாற்றுத்திறனாளி) மாணவி லக்ஷிகா பவனி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார். இந்த மாணவியின் இடுப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் துரதிர்ஷ்டவசமாக நடக்க முடியாத நிலைக்கு மாணவி ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சக்கரநாற்காலியின் உதவியில் எட்டு […]

உலகம் செய்தி

உலகின் தனிமைப்படுத்தப்பட்ட தலைவர்களிடையே முக்கிய சந்திப்பு

  • September 13, 2023
  • 0 Comments

உலகின் தனிமைப்படுத்தப்பட்ட தலைவர்களான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பு சுமார் ஐந்து மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதால் இருவரும் தங்கள் “நட்பிற்காக” ஒருவரையொருவர் பாராட்டியதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் மிக முக்கியமான செயற்கைக்கோள் ஏவுதளமான வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இரு தலைவர்களும் சந்தித்தனர். கிம் மற்றும் புடின் சந்திப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வடகொரியா தனது […]

செய்தி வட அமெரிக்கா

போதைப்பொருள் மன்னன் எல் சாப்போவின் மனைவி விடுதலை

  • September 13, 2023
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல்காரன் ஜோகுவின் “எல் சாப்போ” குஸ்மானின் மனைவி எம்மா கரோனல் அமெரிக்காவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் நவம்பர் 2021 இல் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, பெடரல் பீரோ ஆஃப் ப்ரிசன்ஸ் அவர் விடுதலையை உறுதி செய்தது. அவரது கணவர் கொலராடோவில் உள்ள சூப்பர்மேக்ஸ் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். எல் சாப்போ குஸ்மான், 66, 2019 இல் […]

பொழுதுபோக்கு

ARR இசைநிகழ்ச்சி சர்ச்சை – மன்னிப்பு கோரிய ரகுமான்

  • September 13, 2023
  • 0 Comments

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர். முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல […]

உலகம் செய்தி

வியட்நாம் தலைநகரில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து!! 56 பேர் உயிரிழப்பு

  • September 13, 2023
  • 0 Comments

வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ அணைக்கப்பட்டு கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது, ஆனால் அது மோட்டார் சைக்கிள்கள் நிறைந்த கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் தொடங்கியது என்று சாட்சிகள் தெரிவித்தனர். கட்டிடத்திற்குள் பலத்த சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கருப்பு புகை கிளம்பியதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் […]

இலங்கை செய்தி

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி!! ஐந்து லட்சம் ரூபா நட்டஈடு

  • September 13, 2023
  • 0 Comments

ஹொரபே புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தினித் இந்துவர பெரேராவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறான விபத்து தொடர்பில் நட்டஈடு வழங்குவதற்கு சட்ட ரீதியாக எவ்வித அடிப்படையும் இல்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், போக்குவரத்து அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைச்சரவை அங்கீகாரத்திற்கு உட்பட்டு, உயிரிழந்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

கொலை குற்றச்சாட்டில் இரு உக்ரேனிய வீரர்களுக்கு 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • September 13, 2023
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷியாவினால் நிறுவப்பட்ட நீதிமன்றம் இரண்டு உக்ரேனிய வீரர்களுக்கு தலா 29 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது, ரஷ்யாவின் புலனாய்வுக் குழு அவர்கள் மூன்று பொதுமக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் புலனாய்வுக் குழு இரண்டு வீரர்களையும் “இவான் போச்சரேவ்” மற்றும் “டிமிட்ரி கானுபர்” என்று பெயரிட்டது, மேலும் அவர்கள் உக்ரைனின் அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதில், “நிராயுதபாணியான இரு பொதுமக்களுடன் இருவரும் தன்னியக்க துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஒரு காரை […]

error: Content is protected !!