கோட்டாபய அரசியலுக்கு வருவதை நாம் தீர்மானிக்க முடியாது – நாமல்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது அவரது விருப்பத்திற்கேற்ப அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், இது சம்பந்தமாக சில தரப்பினருடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை தாம் தீர்மானிக்க முடியாது எனக் கூறியுள்ளார். ஜனநாயகம் என்பது பல்வேறு நபர்கள் […]













