இலங்கை

கடமைக்காக சமூகம் தர மாட்டோம்! மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்கள் பகிரங்க கடிதம்

  • September 16, 2023
  • 0 Comments

எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதியன்று கடமைக்காக சமூகம் தர மாட்டோம் என சிற்றூழியர் மேற்பார்வையாளர்கள் ஊடாக மூதூர் தள வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க பொது விடுமுறை நாட்களில் கொடுப்பனவு வழங்குமாறு சிற்றூழியர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இன்னும் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனடிப்படையில் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஊடாக மூதூர், தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிர்வரும் 28-ம் 29 ஆகிய இரு நாட்களும் […]

அறிந்திருக்க வேண்டியவை

உலகில் முதல் முறையாக நாய்-நரி கலப்பு இனம் கண்டுபிடிப்பு!

  • September 16, 2023
  • 0 Comments

உலகில் முதன்முறையாக நாய்-நரி கலப்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரியலாளர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில், பிரேசிலின் ரியோ கிராண்டே பகுதியில் நரி போன்ற உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட உயிரினம் குறித்து உயிரியலாளர்கள் ஆய்வு நடத்தி வந்தனர். நாய் அல்லது நரி போன்ற தோற்றத்தில் இருந்த அந்த விலங்குக்கு நாய்கள் வழக்கமாக உண்ணும் உணவுப் பொருட்களை காவலர்கள் உணவாக அளித்தனர். ஆனால் இந்த உயிரினம் சிறிய எலிகளை சாப்பிட […]

ஐரோப்பா

நைஜரில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் தூதர்..!

  • September 16, 2023
  • 0 Comments

நைஜர் நாட்டில், பிரான்ஸ் தூதரும் தூதரக அதிகாரிகளும் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் Burgundy நகரில், ஊடகவியலாளர்களிடம் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதரும், தூதரக அதிகாரிகளும், நைஜர் நாட்டில் ராணுவ அரசால் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் தூதரகத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு வெளியிலிருந்து உணவு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் ரேஷன் உணவே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் மேக்ரான். ஜூலை மாதம் 26ம் திகதி, நைஜர் […]

இலங்கை

நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் : ஷெகான் சேமசிங்க!

  • September 16, 2023
  • 0 Comments

எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் எனவும், அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாக மாத்திரமே செயற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அடிப்படையில் எதிர்காலத்தில், அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும், நமது பொருளாதாரம் தனியார் துறையால் இயக்கப்படும். எனவே, அரசு ஒரு ஒழுங்குமுறை ஆணையமாக மட்டுமே செயல்படும். “பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல […]

வட அமெரிக்கா

சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு கியூபா விதித்த தடை ; 17 பேர் கைது

  • September 16, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை விதித்துள்ளது.உக்ரைனுக்கு எதிராக சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா கடந்த ஆண்டு போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ள நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகளான சீன, வடகொரியா போன்றவை செயல்படுகின்றன. இந்தநிலையில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி ரஷ்யாவின் அண்டை நாடான கியூபாவில் சட்ட […]

உலகம்

லிபியாவில் வெள்ளத்தில் 11300 பேர் உயிரிழப்பு

  • September 16, 2023
  • 0 Comments

லிபியாவில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது 10,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியா மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு வட ஆப்பிரிக்க நாடு. அந்த கடலில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவை கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை பெய்தது. மேலும், புயல் தாக்கியது. இதனால் அப்பகுதியில் ஓடும் வாடி டோனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையின் முழு கொள்ளளவும் திறக்கப்பட்ட நிலையிலும், ஆற்றின் […]

ஐரோப்பா

அமெரிக்கன் XL புல்லி இன நாய்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் திட்டம்

  • September 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவை சேர்ந்த XL புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில், அமெரிக்காவின் XL புல்லி இன நாய்கள் நம்முடைய சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்த கூடியவை என தெளிவாக தெரிகிறது. இதனை வரையறை செய்து, தடை […]

இலங்கை

2000 வாகனங்கள் தொடர்பில் இலங்கை புலனாய்வு துறை வெளியிட்ட தகவல்கள்!

  • September 16, 2023
  • 0 Comments

அரசாங்க பதவிகளில் இருக்கும் அரச அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2000 வாகனங்கள் அவர்களுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக பெருமளவிலான பணம் வீண்விரயமாகியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில தலைவர்கள் தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும்  நிறுவனத்திற்கு வாடகைக்கு வழங்கி, அவற்றையும் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

பிரதமரை சந்தித்த நடிகர் பிரபுதேவா!

  • September 16, 2023
  • 0 Comments

திரைப்பட படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான பிரபுதேவா, பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இலங்கை

பிரதமர்- பசில் இடையே திடீர் சந்திப்பு

  • September 16, 2023
  • 0 Comments

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பிரதமர் தலைமைத்துவம் வகிக்கும் மஹஜன ஐக்கிய முன்னணியும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!