அரசியல் இலங்கை செய்தி

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசர உத்தரவு!

  • December 13, 2025
  • 0 Comments

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று (13) முற்பகல் நடைபெற்ற […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச உதவிகள் முறையாக பங்கீடு: தேரர் பாராட்டு!

  • December 13, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்கள் எமக்கு உள்ளன. சுனாமி மற்றும் கொரோனா காலகட்டங்களின்போது கொள்ளைகள் இடம்பெற்றன. அரசியல் வாதிகள் மோசடிகளில் ஈடுபட்டனர் தமது சொத்துகளை பெருக்கிக்கொண்டனர். இதனால் நாடு மீண்டெழ இருந்த சந்தர்ப்பம் இல்லாமல்போனது.எனினும், இந்த ஆட்சியில் அப்படி நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. […]

ஐரோப்பா

புற்றுநோய் சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசிய மன்னர் – பலரும் பாராட்டு

  • December 13, 2025
  • 0 Comments

தனது புற்றுநோய் சிகிச்சை குறித்து மன்னர் சார்லஸ் வெளிப்படையாக பேசியதை பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, ஆரம்பகால நோயறிதலும் பரிசோதனையும் உயிர்களை காப்பாற்றும் என்பதை அவர் வலியுறுத்தினார். Stand Up To Cancer பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, Channel 4 இல் ஒளிபரப்பப்பட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி செய்தியில் தனது சிகிச்சை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக மன்னர் தெரிவித்தார். இதேவேளை, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக எளிதாக உயிர்களை காப்பாற்றும் என்றும், மக்கள் தங்களுக்கு கிடைக்கும் பரிசோதனை வாய்ப்புகளை பயன்படுத்திக் […]

ஐரோப்பா செய்தி

UK வில் பல்லைக்கழகத்தின் தவறால் பறிப்போன உயிர் : கௌரவ பட்டத்தை பெற்ற தாய்!

  • December 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பட்டம் பெற தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஒருவரின் பட்டத்தை அவரது தாயர் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்றுவந்த 23 வயதான ஈதன் ஸ்காட் பிரவுன் (Ethan Scott Brown) என்ற மாணவர் டிசம்பர் 2024 இல் பட்டம் பெறவிருந்தார். இருப்பினும், செப்டம்பர் 2024 இல், பல்கலைக்கழகம் அவருக்கு தவறான மதிப்பெண்ணை வழங்கிய நிலையில், அவர் பட்டம் பெற தகுதி […]

உலகம் செய்தி

எப்ஸ்டீன் விவகாரம்: டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்களின் இரகசியப் படங்கள் வெளியீடு.

  • December 13, 2025
  • 0 Comments

எப்ஸ்டீனின் இரகசியப் புகைப்படங்கள் தொடர் வெளியீடு; டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்புகள் அம்பலம் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சொத்துக்களில் இருந்து 95,000க்கும் அதிகமான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்க நாடாளுமன்றக் குழு பெற்றது. இதில், இரண்டாவது கட்டமாக, 80க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் நேற்று ஜனநாயகக் கட்சியினரால் வெளியிடப்பட்டது. இந்த இரகசியப் புகைப்படங்களில் எப்ஸ்டீனின் தனிப்பட்ட தீவுப் புகைப்படங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், தொழில்நுட்பக் கோடீஸ்வரர் பில் […]

உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ட்ரம்பின் வெளிநாட்டு தூதுவர் ஜெர்மனுக்கு விஜயம்

  • December 13, 2025
  • 0 Comments

  போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு தூதுவர், இந்த வார இறுதியில் ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய வெள்ளை மாளிகை முயற்சிகளுக்கு இவர் தலைமை தாங்குகிறார். கிறிஸ்துமஸ் மாதத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதற்காக […]

உலகம்

ஓமன் வளைக்குடாவில் இலங்கையர்கள் பயணித்த கப்பலை சுற்றிவளைத்த ஈரான்!

  • December 13, 2025
  • 0 Comments

ஓமன் வளைக்குடாவில் பயணித்த எரிபொருள் டேங்கர் கப்பலை நேற்று ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த கப்பலில்  இலங்கையர்கள் உட்பட 18 பேர் பயணித்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட பணியாளர்களில் இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6 மில்லியன் லிட்டர் எரிபொருளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிறுத்த உத்தரவுகளை புறக்கணித்தல், […]

இலங்கை

வெளிநாட்டில் உள்ளோர் இலங்கைக்கு அனுப்பிய பணம் சாதனை பதிவு

  • December 13, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் பணிபுரிவோர், இலங்கைக்கு மேற்கொண்ட பண அனுப்பல் நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணவனுப்பல் 7.19 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20.7 சதவீத அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகம் முக்கிய செய்திகள்

சர்வதேச கடற்பகுதியில் அத்துமீறும் அமெரிக்கா – சர்ச்சையை கிளப்பிய புதிய விடயம்!

  • December 13, 2025
  • 0 Comments

சீனாவிலிருந்து ஈரானுக்கு பயணித்த  சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்க படைகள் சோதனை செய்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா சமீபகாலங்களில் கடற்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  சீனாவிலிருந்து ஈரானுக்கு பயணித்த சரக்கு கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியது இதுவே முதல் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “ஈரானின் வழக்கமான ஆயுதங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” பொருட்களை அக்கப்பலில் […]

ஐரோப்பா செய்தி

UKவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி கோமாவிற்கு சென்றதால் பரபரப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கோமா நிலைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 04 வயதான சியன்னா டுனியன் (Sienna Dunion) என்ற சிறுமி ப்ளூ  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அரிதான மற்றும் கடுமையான மூளை கோளாறை ஏற்படுத்தும் அக்யூட் நெக்ரோடைசிங் என்செபாலிடிஸ் ( Acute Necrotising Encephalitis) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய நிலை மோசமடைந்ததை தொடர்ந்து உடனடியாக  நாட்டிங்ஹாமில் (Nottingham) உள்ள குயின் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு […]

error: Content is protected !!