இலங்கை விளையாட்டு

தசுன் பதவி நீக்கம்- இன்று மாலை புதிய தலைவர் நியமனம்

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு தசுன் ஷானக்க இன்று (20) காலை அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் இன்று(20) மாலை நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை

சமந்தா பவர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாக அதிகாரி  சமந்தா பவருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (19.09)  இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் வழங்கிய ஆதரவிற்காக  சமந்தா பவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுருக்கமாக  விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (19.09) இடம்பெற்றுள்ளது. இதன்போது  கடனை செலுத்துவதில் இலங்கை படிப்படியாக அடைந்து வரும் பொருளாதார முன்னேற்றம் வெளிப்படுவதாகவும், அது தொடர்ந்தால் இலங்கையின் நிலை சிறப்பாக இருக்கும் என்றும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் காட்டிய ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த வருட […]

இலங்கை

IMF பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்த தொழிற்சங்க குழு!

  • September 20, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இன்று (20.09) சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தது. குறித்த மகஜரில், வரிக்கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் கடுமையான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை, வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து உழைக்கும் வர்க்க மக்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவை கோரி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை

திருகோணமலை – 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ள அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

  • September 20, 2023
  • 0 Comments

வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (20) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் வைத்தியத்துறை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்,வைத்திய சாலைகளில் போதிய மருந்துகள் பற்றாக்குறையாக காணப்படுகிறது, விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்மையால் பொதுமக்கள் நாளாந்தம் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கையில் கோடாரியுடன் சாலையில் சுற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

  • September 20, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய பொலிஸாரல் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நியூகாசில் பகுதியில் இளம்பெண் ஒருவர் கையில் கோடாரி ஒன்றுடன் சாலையில் சென்று கொண்டு இருந்த பொதுமக்களை துரத்தி மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அந்த பெண் பொலிஸாரையும் கோடாரியால் தாக்க முற்பட்டதால் […]

இலங்கை

இலங்கையில் நிர்வாண ஒளிப்படங்களுடன் சிக்கிய இளம் பிக்கு!

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறுவர், சிறுமியரின் நிர்வாண ஒளிப்படங்களை விற்பனை செய்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். ராகமை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படங்களை விற்பனை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அவர் குறித்த படங்களை விற்பனை செய்து கிரிப்டோகரன்சி மூலம் பணம் சம்பாதிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (19.09) அப்பகுதிக்கு சென்ற புலனாய்வு […]

செய்தி

லேடி சூப்பர்ஸ்டார் உடன் மீண்டும் கூட்டணி அமைத்த யோகிபாபு… எதிர்பார்ப்பு எகிறியது

  • September 20, 2023
  • 0 Comments

யூடியூபர் டியூடு விக்கி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் மண்ணாங்கட்டி படத்தின் பூஜையில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய தேர்ந்த நடிப்புத்திறனாலும், வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, […]

இலங்கை

முன்னறிவிப்பின்றி ஜனாதிபதியுடன் பயணமான MP-க்கள்

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், அவர்களில் பலர் ஜனாதிபதியின் முக்கிய சந்திப்புகளில் கலந்துள்ளதை புகைப்படங்களின் மூலம் காணமுடிகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி விக்ரமசிங்க சந்தித்த போது காணப்பட்டார். இதேவேளை, […]

ஐரோப்பா வட அமெரிக்கா

அணு ஆயுதங்களை வைத்திருக்க பயங்கரவாதிகளுக்கு எந்த உரிமையும் இல்லை: ஜெலன்ஸ்கி

  • September 20, 2023
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது, ஒன்றரை ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ரஷ்யாவை கடுமையாக தாக்கி பேசினார். ரஷ்யா பல விடயங்களை ஆயுதம் ஆக்கி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார். அந்த விடயங்கள் எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, […]

error: Content is protected !!