இலங்கை

பிள்ளையானின் கொலைப்பட்டியலை விரைவில் வெளியிடுவேன் – இரா.பிரபா

  • September 20, 2023
  • 0 Comments

பிள்ளையானின் கொலைப்பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ISIS என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் […]

இலங்கை

நல்லூர் திருவிழாவில் தவறவிடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது பக்தர்கள் தவறவிட்ட பெறுமதியான பொருட்கள், யாழ், மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உரியவர்கள் அதனை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை யாழ் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். பெறுமதி மிக்க குறித்த பொருட்களின் உரிமையாளர்கள். அவற்றை ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடுமையாக பேசுவேன் – மைத்திரி!

  • September 20, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு வருடங்களாக துன்புறுத்திய போதிலும் தற்போது தான் உண்மை வெளிவருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் மிகக் கடுமையாகப் பேசுவேன் என்றும்  கூறியுள்ளார். சனல் ஃபோ அறிக்கை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச […]

ஐரோப்பா

சுவிஸில் குழந்தை தொல்லை கொடுத்ததால் பெண் செய்த செயல்..!

  • September 20, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில், குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர், குழந்தை தொல்லை கொடுத்ததால் வெறுப்படைந்து அதை பலமாக உலுக்கியதில், குழந்தை உயிரிழந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர், குழந்தை தொல்லை கொடுத்ததால் வெறுப்படைந்து அதை பலமாக உலுக்கியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை மூன்று நாட்களில் உயிரிழந்துவிட்டது. தன் தவறை அந்த பெண் ஒப்புக்கொண்டார்.அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் சிறை செல்வது […]

ஐரோப்பா

ஈரானுக்கு பயணமான ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு

  • September 20, 2023
  • 0 Comments

ராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செர்ஜி ஷோய்கு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது.ரஷ்யா பயன்படுத்தும் ஈரானிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டது உண்மைதான் என்றும், அவை போர் தொடங்குவதற்கு முன்னதாக வழங்கப்பட்டவை என்று தெஹ்ரான் தெரிவித்தது. ஆனால் தி வாஷிங்டன் போஸ்ட் ரஷ்யாவில் ட்ரோன்கள் உற்பத்தியை தொடங்க 2022ல் அக்டோபரில் […]

இலங்கை

இலங்கையில் மாரடைப்பால் உயிரிழக்கும் இளைஞர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்!

  • September 20, 2023
  • 0 Comments

மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 03 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி கடந்த 03 மாதக் காலப்பகுதியில் மாரடைப்பால் உயிரிழக்கும் 50 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் உலக சாதனை படைத்த வெங்காயம்

  • September 20, 2023
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார். அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது. […]

உலகம்

மனித மூளைக்குள் சிப் பொருத்தும் செயற்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கின் புதுமை நிறுவனமான நியூராலிங்க் தற்போது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியூராலிங்க் கணினி சிப்பின் மனித சோதனைகளுக்கான ஒப்புதலுடன் வருகிறது, இது முடங்கிய நோயாளிகளுக்கு இயக்கத்தை கொடுக்க முயற்சிக்கிறது. மனித மூளைக்கு அந்நியமான செயற்கை சாதனத்தை பொருத்தும் அபாயம் இருப்பதால், இது வரை அங்கீகரிக்கப்படவில்லை. நியூராலிங்க் ஆய்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள் முதுகெலும்பு காயம் அல்லது துண்டிக்கப்பட்ட நோயாளிகள். இந்த […]

பொழுதுபோக்கு

அம்பானி வீட்டுக்குள்ளேயே நுழைந்தார் அட்லீ

  • September 20, 2023
  • 0 Comments

ஜவான் படம் ஹிட்டடித்ததை அடுத்து இயக்குநர் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் அம்பானி வீட்டுக்கு சென்றார். ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே மெகா ஹிட்டாகி நூறு நாட்கள் ஓடியது. படத்தின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கிறது என்று பேசப்பட்டது. இதனையடுத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் பிகிலை தவிர்த்து தெறியும், மெர்சலும் மெகா ஹிட்டாகின. பல விமர்சனங்களை சந்தித்தாலும் அட்லீ தற்போது ஹிந்தியில் எண்ட்ரி கொடுத்து ஷாருக்கான் […]

இலங்கை

இலங்கை வந்தார் நடிகை ஆண்ட்ரியா!

  • September 20, 2023
  • 0 Comments

தென்னிந்திய நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில்  இன்று (20.09) யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள அழகிய நல்லூர்கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று எனது நாளைத் தொடங்கினேன் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!