இலங்கை

பொதுத்துறை ஊழியர்களுக்கு முற்பணம் வழங்க நடவடிக்கை!

  • December 13, 2025
  • 0 Comments

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு  பொதுத்துறை ஊழியர்களுக்கு  4,000 வரை சிறப்பு முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, தொடர்புடைய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை, அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த முற்பணத்தை ஜனவரி முதல் திகதியில் தொடங்கி அந்த ஆண்டின் பெப்ரவரி கடைசி திகதிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் […]

ஐரோப்பா செய்தி

ஐந்து நாள் வேலைநிறுத்தம்: சுகாதார அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தல் – பிரதமர் அறிவிப்பு.

  • December 13, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் எனப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Rodney Starmer) மருத்துவர்களை வலியுறுத்தியுள்ளார். காய்ச்சல் பரவலின் போது வேலைநிறுத்தம் பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பின்னான “மிகவும் ஆபத்தான தருணத்தில்” இருப்பதாகவும், வேலைநிறுத்தங்கள் சுகாதார அமைப்பையும் நோயாளிகளையும் “கடுமையான ஆபத்தில்” ஆழ்த்தும் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், மருத்துவர்கள் […]

ஐரோப்பா செய்தி

புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் பல்கேரியா!

  • December 13, 2025
  • 0 Comments

ஊழல் எதிர்ப்பு போராட்டங்களால் அரசாங்கம் இராஜினாமா செய்துள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து நாடாளுமன்றக் குழுக்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோசன் ஜெலியாஸ்கோ (Rosen Zhelyazkov) தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைத்ததில் இருந்து சுமார் 06 தடவைகள்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற போராட்டம் ஆட்சி கவிழ்ப்பிற்கு வழிவகுத்தது. இதற்கமைய ஜனாதிபதி ருமென் ராடேவ் (Rumen Radev) […]

இலங்கை

யாழில் இறந்தும் இருவரின் உயிரை காப்பாற்றிய 27 வயது இளைஞன்

  • December 13, 2025
  • 0 Comments

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன், இருவரின் உயிரை காப்பாற்றி , தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர். வவுனியாவை சேர்ந்த 27 வயதான ரவிராஜ் ராஜ்கிரண் என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசர உத்தரவு!

  • December 13, 2025
  • 0 Comments

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று (13) முற்பகல் நடைபெற்ற […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச உதவிகள் முறையாக பங்கீடு: தேரர் பாராட்டு!

  • December 13, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாக பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்கள் எமக்கு உள்ளன. சுனாமி மற்றும் கொரோனா காலகட்டங்களின்போது கொள்ளைகள் இடம்பெற்றன. அரசியல் வாதிகள் மோசடிகளில் ஈடுபட்டனர் தமது சொத்துகளை பெருக்கிக்கொண்டனர். இதனால் நாடு மீண்டெழ இருந்த சந்தர்ப்பம் இல்லாமல்போனது.எனினும், இந்த ஆட்சியில் அப்படி நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. […]

ஐரோப்பா

புற்றுநோய் சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசிய மன்னர் – பலரும் பாராட்டு

  • December 13, 2025
  • 0 Comments

தனது புற்றுநோய் சிகிச்சை குறித்து மன்னர் சார்லஸ் வெளிப்படையாக பேசியதை பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, ஆரம்பகால நோயறிதலும் பரிசோதனையும் உயிர்களை காப்பாற்றும் என்பதை அவர் வலியுறுத்தினார். Stand Up To Cancer பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, Channel 4 இல் ஒளிபரப்பப்பட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி செய்தியில் தனது சிகிச்சை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக மன்னர் தெரிவித்தார். இதேவேளை, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக எளிதாக உயிர்களை காப்பாற்றும் என்றும், மக்கள் தங்களுக்கு கிடைக்கும் பரிசோதனை வாய்ப்புகளை பயன்படுத்திக் […]

ஐரோப்பா செய்தி

UK வில் பல்லைக்கழகத்தின் தவறால் பறிப்போன உயிர் : கௌரவ பட்டத்தை பெற்ற தாய்!

  • December 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பட்டம் பெற தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஒருவரின் பட்டத்தை அவரது தாயர் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்றுவந்த 23 வயதான ஈதன் ஸ்காட் பிரவுன் (Ethan Scott Brown) என்ற மாணவர் டிசம்பர் 2024 இல் பட்டம் பெறவிருந்தார். இருப்பினும், செப்டம்பர் 2024 இல், பல்கலைக்கழகம் அவருக்கு தவறான மதிப்பெண்ணை வழங்கிய நிலையில், அவர் பட்டம் பெற தகுதி […]

உலகம் செய்தி

எப்ஸ்டீன் விவகாரம்: டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்களின் இரகசியப் படங்கள் வெளியீடு.

  • December 13, 2025
  • 0 Comments

எப்ஸ்டீனின் இரகசியப் புகைப்படங்கள் தொடர் வெளியீடு; டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்புகள் அம்பலம் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சொத்துக்களில் இருந்து 95,000க்கும் அதிகமான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்க நாடாளுமன்றக் குழு பெற்றது. இதில், இரண்டாவது கட்டமாக, 80க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் நேற்று ஜனநாயகக் கட்சியினரால் வெளியிடப்பட்டது. இந்த இரகசியப் புகைப்படங்களில் எப்ஸ்டீனின் தனிப்பட்ட தீவுப் புகைப்படங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், தொழில்நுட்பக் கோடீஸ்வரர் பில் […]

உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ட்ரம்பின் வெளிநாட்டு தூதுவர் ஜெர்மனுக்கு விஜயம்

  • December 13, 2025
  • 0 Comments

  போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு தூதுவர், இந்த வார இறுதியில் ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய வெள்ளை மாளிகை முயற்சிகளுக்கு இவர் தலைமை தாங்குகிறார். கிறிஸ்துமஸ் மாதத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதற்காக […]

error: Content is protected !!