இலங்கை

தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது!

  • September 21, 2023
  • 0 Comments

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் இன்று (21.09) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்தரை  தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

என்ன கன்றாவிடா இது? எமி ஜாக்சனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் படங்கள்

  • September 21, 2023
  • 0 Comments

தமிழில் மதராசபட்டினம், தெறி, ஐ போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டிணம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அப்படத்தில் வெளிநாட்டு பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தி இருந்தார் எமி. மதராசப்பட்டிணம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் எமி ஜாக்சனுக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. அதன்படி விக்ரம் உடன் தாண்டவம் மற்றும் ஐ, […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு இனி எந்த உதவியும் வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ள போலந்து

  • September 21, 2023
  • 0 Comments

தானிய இறக்குமதி தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதல், தற்போது உக்ரைனுக்கு இனி ஆயுத உதவிகள் எதுவும் செய்வதாக இல்லை என்ற முடிவுக்கு போலந்து நாட்டை தள்ளியுள்ளது. இனி தங்களுக்கான நவீன ஆயுதங்களை உருவாக்க தனி கவனம் செலுத்த இருப்பதாகவும் போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்படுடையதாக இல்லை என குறிப்பிட்டு, செவ்வாய்க்கிழமை தங்கள் நாட்டுக்கான உக்ரைன் தூதரை அழைத்து போலந்து கடிந்து கொண்டது. ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், சில […]

இலங்கை

சரணடைந்தவர்களையே கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்: வினோ எம்பி

  • September 21, 2023
  • 0 Comments

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் இன்று போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் விவகாரத்துக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

  • September 21, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (28) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஐ.நா! இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துக எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது. கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் சர்வதேச விசாரணை வேண்டும் , சர்வதேசமே! போர் குற்ற […]

இலங்கை

இலங்கையில் அரசாங்க பதவிகளில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியீடு!

  • September 21, 2023
  • 0 Comments

நிதி அமைச்சின் கருவூல நடவடிக்கைப் பிரிவு 2024 ஆம் ஆண்டில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம், சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை  உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளியிட முடியாது – சபாநாயகர்!

  • September 21, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (21.09) ஈஸ்டர் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போது விசேட உரையொன்றை ஆற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை […]

வட அமெரிக்கா

பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் சந்திப்பு

  • September 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த 78வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு கூறினார்.ரஷ்யா பல விசயங்களை ஆயுதங்களாக மாற்றி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த விசயங்கள் எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, உங்களுக்கும் (ஐ.நா. பொது சபை உறுப்பு நாடுகள்) கூட எதிராக பயன்படுத்தப்படுகிறது என கூறினார். பயங்கரவாதிகள் […]

உலகம்

அமெரிக்காவில் மின்னல் தாக்கி இருவர் பலி (வீடியோ)

  • September 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள Michoacan நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2023/09/19/6269964918141897207/636x382_MP4_6269964918141897207.mp4

இலங்கை

இலங்கைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வெளிநாட்டு பிரஜை!

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையர்போல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நாட்டிற்குள் நுழைய முற்பட்ட மலேசிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம்  வருகை தந்த அவர், நேற்று (20.09) மாலை  நாட்டிற்குள் நுழைய முற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் தனது இலங்கை கடவுச்சீட்டை உள்ளூர் குடிவரவு கவுன்டர்களிடம் ஒப்படைத்துள்ளார், இதன்போது கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்திற்கும், இவருக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து விசாரணைகளை […]

error: Content is protected !!