இந்தியா செய்தி

இந்தியாவில் புதிய தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடும் டெஸ்லா

  • September 21, 2023
  • 0 Comments

டெஸ்லா இந்தியாவில் பேட்டரி சேமிப்பு அமைப்புகளை உருவாக்கி விற்பனை செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளது மற்றும் ஒரு தொழிற்சாலையை உருவாக்க ஊக்கத்தொகை கோரி அதிகாரிகளுக்கு ஒரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது, எலோன் மஸ்க் நாட்டிற்குள் நுழைவதற்கான உந்துதலைத் தொடர்வதால், திட்டத்தை அறிந்த இரண்டு பேர் தெரிவித்தனர். டெஸ்லா இந்தியாவில் ஒரு புதிய எலக்ட்ரிக் வாகன (EV) தொழிற்சாலையை அமைப்பது பற்றி வாரக்கணக்கில் சுமார் $24,000 விலையில் ஒரு காரை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, விவாதங்களை பிரதமர் நரேந்திர […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்க உதவியின்றி போரில் வெல்ல முடியாது – ஜெலென்ஸ்கி

  • September 21, 2023
  • 0 Comments

உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக் கட்சியின் சந்தேகங்களை எதிர்கொண்டபோது, பில்லியன் கணக்கான டாலர்கள் உதவித் தொகை குறைக்கப்பட்டால், ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போரில் கெய்வ் தோல்வியடையும் என்று எச்சரித்தார். ஜனாதிபதி ஜோ பைடனின் உக்ரைன் சார்பு கொள்கைகளின் முக்கிய ஆதரவாளரான ஜனநாயக செனட் தலைவர் சக் ஷுமர், “எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், நாங்கள் போரை இழப்போம்” என்று ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாக கூறினார். பிப்ரவரி 2022 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் […]

உலகம்

சூடான் கலவரத்தில் 10 அப்பாவி பொதுமக்கள் பலி

  • September 21, 2023
  • 0 Comments

சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். . ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி ஒகோனி ஓக்வோம் ஓடோ ஆவார். கடந்த மே மாதம், அவர் பணிபுரிந்த போச்சலா நகரில் இருந்து பணியிட மாற்றம் செய்து ராணுவ அரசு உத்தரவிட்டது. இதை விரும்பாத ராணுவ அதிகாரி ஓதோ தலைமறைவானார். இந்நிலையில், போச்சாலாவில் இருந்து ஆட்சிக்கு எதிரான படைகளை ஓடோ உயர்த்தி வருவதாக புகார் எழுந்தது. […]

இலங்கை

ஐ.எம்.எப் இருந்து வாங்கப்பட்ட கடன் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது: இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர்

  • September 21, 2023
  • 0 Comments

ஐ.எம்.எப் இருந்து வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. மிகுதி 9 ரில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க,மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். […]

இலங்கை

மன்னார் நகரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் பவனி ஊர்தி

  • September 21, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் 36 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலையில் 7 வது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை (21) மாலை குறித்த ஊர்திப் பவனி மன்னார் நகரை வந்தடைந்தது. இன்று வியாழக்கிழமை(21) மாலை 5.50 மணி அளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை […]

இலங்கை

சோழன் சாதனை படைத்த பாடசாலை மாணவி

  • September 21, 2023
  • 0 Comments

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் 54 கிலோமீற்றர் தூரத்தை 8.30 மணித்தியாலங்களில் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார். ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள சென்.மேரிஸ் தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் வசந்தகுமார் நிதர்ஷன (15) என்ற மாணவியே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். புதன்கிழமை (20) காலை 6.05 மணிக்கு நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய மைதானத்தில் இருந்து புறப்பட்ட அவர், பிற்பகல் 2.35 மணியளவில் நடைப்பயணத்தை முடித்தார். நாவலப்பிட்டி, கினிகத்தேனை, வட்டவளை, […]

இந்தியா

ஓணம் லொட்டரியால் ஏற்பட்ட தகராறு: நண்பனையே சரமாரியாக வெட்டி கொன்ற கொடூரம்!

  • September 21, 2023
  • 0 Comments

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லொட்ரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லொட்ரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் லட்சங்கள் மற்றும் கோடிகளில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லொட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது. விற்பனைக்காக மொத்தம் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 74.51 லட்சம் லொட்ரி சீட்டுகள் விற்பனையாகின. அவற்றுக்கான குலுக்கல் நேற்று நடந்தது. தங்களுக்கு பரிசு விழுமா? என்ற ஆவலில் […]

இலங்கை

பாராளுமன்றம் ஜனாதிபதி செயலகத்துக்கு அடிபணிந்து செயற்படக்கூடாது – லக்ஷ்மன் கிரியெல்ல!

  • September 21, 2023
  • 0 Comments

நாடாளுமன்றம் ஜனாதிபதி செயலகத்திற்கு கட்டுப்பட்டு நடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செனல் – 04 வெளியிட்ட காணொலி குறித்து இன்று (21.09) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாத்தத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தலையிட ஜனாதிபதி செயலகத்துக்கு அதிகாரம் இல்லை எனக் […]

பொழுதுபோக்கு

விஜயும், சஞ்சய் தத்தும் நேருக்கு நேர் மோதும் புதிய போஸ்டர்

  • September 21, 2023
  • 0 Comments

விஜயும், சஞ்சய் தத்தும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் […]

இலங்கை

யாழில் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறை வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று யாழில் நடாத்தப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐஓஎம் அலுவலகம் முன்பாக இன்று காலை இப் போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கம் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றும் […]

error: Content is protected !!