ஆப்பிரிக்கா செய்தி

நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 3 தென்னாப்பிரிக்க கடற்படை வீரர்கள் பலி

  • September 21, 2023
  • 0 Comments

ஹெலிகாப்டர் ஒன்றிற்கு செங்குத்தாக பொருட்களை அனுப்ப முயன்றபோது, நீர்மூழ்கிக் கப்பலின் ஏழு பணியாளர்கள் பெரிய கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதில் மூன்று தென்னாப்பிரிக்க கடற்படை வீரர்கள் இறந்ததாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. விமானப்படையின் லின்க்ஸ் ஹெலிகாப்டர், கேப் டவுன் கடற்கரையில் கடல் மேற்பரப்பில் SAS மந்தடிசி நீர்மூழ்கிக் கப்பலுக்கான பொருட்களை “வெர்டிரெப்” அல்லது செங்குத்து நிரப்புதல் என அழைக்கப்படும் முயற்சியில் விபத்து நடந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது. உடனடியாக நடவடிக்கை நிறுத்தப்பட்டு மீட்புப் பணி ஆரம்பமாகியது. ஏழு வீரர்களும் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தில் தாக்குதல் நடத்திய நபர்

  • September 21, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது அவசரகால ஊழியர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவிற்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே தகராறு செய்ததாகக் கூறப்படும் சமூக ஊடக வீடியோவைக் குறிப்பிட்டு இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர். லெய்செஸ்டர் நகரில் விநாயக சதுர்த்தி கொகொண்டாட்டத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைகள் தொடர்வதால் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டதாகவும் லீசெஸ்டர்ஷைர் பொலிஸார் தெரிவித்தனர். “லெய்செஸ்டரில் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

மீண்டும் உயிருடன் வந்த சில்க் சுமிதா… உண்மையில் இவர் யார்?

  • September 21, 2023
  • 0 Comments

காந்த கண்கள், இளைஞர்கள் மட்டுமல்ல எல்லோரையும் மயக்கும் பார்வை, சொக்க வைக்கும் நளினமான நடனம், 90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே அதுபாட்டுக்கு படம் ஓடும் என்றால் அவர் தான் சில்க் சுமிதா. சில்க் சுமிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக […]

ஆசியா செய்தி

2024ம் ஆண்டு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறை

  • September 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் 2024 ஆம் ஆண்டு முதல் தானியங்கி குடியேற்ற அனுமதியுடன் பாஸ்போர்ட் இல்லாமலாகிறது என்று தெரிவிக்கப்பட்டது. பயோமெட்ரிக் தரவுகளை மட்டும் பயன்படுத்தி, பாஸ்போர்ட் இல்லாமலேயே பயணிகள் நகர-மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் தானியங்கி குடியேற்ற அனுமதியை விமான நிலையம் அறிமுகப்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சிங்கப்பூரின் தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசஃபின் தியோ, திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, நாட்டின் குடிவரவுச் சட்டத்தில் பல மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டபோது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். […]

ஆசியா செய்தி

வயிற்று வலியால் வைத்தியசாலைக்கு சென்ற இளைஞன் – மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • September 21, 2023
  • 0 Comments

வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றபோது அவரது அடிவயிற்றில் 6 அங்குல கத்தியைக் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். நேபாளத்தைச் சேர்ந்த 22 வயது நபர், முந்தைய நாள் சண்டையில் கத்தியால் குத்தப்பட்டார், அங்கு உள்ளூர் மருத்துவக் நிலையத்தில் ஒரு சுகாதார ஊழியர் காயத்தைத் தைத்தார், ஆனால் கத்தி அவருக்குள் இருக்கிறதா என்று சோதிக்கவில்லை. அடுத்த நாள், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏதுமின்றி, “லேசான தொடர்ச்சியான இடது கீழ் வயிற்று வலியுடன்” அந்த […]

இலங்கை

800 திரைப்படத்தை மக்கள் சிங்கள மொழியிலும் பார்க்க வேண்டும்: முத்தையா முரளிதரன்

  • September 21, 2023
  • 0 Comments

எம் மண்ணின் மைந்தனான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் 800 திரைப்படம். உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட “800” திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் அது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (21) கொழும்பில் நடைபெற்றது. முத்தையா முரளிதரன் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது […]

இலங்கை செய்தி

கொலை செய்தவர்களே விசாரணை செய்தால் நியாயம் கிடைக்குமா? – முன்னாள் தவிசாளர் தவராசா

  • September 21, 2023
  • 0 Comments

கொக்குதொடுவாய் விடயம் கொலையை செய்தவர்களே விசாரணைகளை செய்தால் எந்த முறையில் நியாயம் கிடைக்கும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று சர்வதேச சமாதான தினம் ஆனால் 30 […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் சார்லஸ் மன்னருக்கு வழங்கப்பட்ட பிரபல கால்பந்து அணி ஜெர்சி

  • September 21, 2023
  • 0 Comments

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு பிரான்ஸ் விஜயத்தின் போது கத்தாருக்கு சொந்தமான கால்பந்து கிளப்பின் தலைவரால் மூன்றாம் எண் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் ஜெர்சி வழங்கப்பட்டது. பிரான்சின் தேசிய மைதானம் அமைந்துள்ள பாரிஸின் வடக்கே தொழிலாள வர்க்க நகரமான Saint-Denis இல் நடைபயணத்தின் போது மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாசர் அல்-கெலைஃபியை சந்தித்தனர். கடந்த 11 சீசன்களில் ஒன்பது முறை லீக் 1 பட்டத்தை வென்றுள்ள திரு கெலைஃபி, சார்லஸுக்கு PSG ஜெர்சியை வழங்கினார். PSGயின் பிரெஞ்சு […]

இலங்கை

உலக வங்கியின் பணிப்பாளருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகள் பாராட்டப்படுவதாகவும் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ஜேர்வோஸ் Faris Hadad Zervos தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (2023.09.21) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண […]

பொழுதுபோக்கு

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”.. விஜய் ஆண்டனி உருக்கம்

  • September 21, 2023
  • 0 Comments

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்த நிலையில் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் என் மகள் ஜாதி, மதம், பணம், வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு தான் சென்று இருக்கிறாள் என் மகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள். தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த […]

error: Content is protected !!