இலங்கை

தெல்லிப்பளையில் உணவு சட்டங்களை மீறிய பலருக்கு நேர்ந்த கதி

  • September 22, 2023
  • 0 Comments

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் நீண்ட கால காலவதி திகதி முடிவுற்ற மற்றும் தவறான உணவுப்பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ந 6 பேருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 6 பேருக்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள யூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் ஒரு வருட காலப்பகுதியும் குறித்த காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட அனைத்து பைக்கற்றுகளிலும் முனகூட்டியே அச்சிடப்பட்ட […]

இலங்கை

இந்தியாவில் குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் இலங்கையில் கைது!

  • September 22, 2023
  • 0 Comments

இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் இலங்கை பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் பங்களாதேஷில் போலியான விமான அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்த இந்த நபர் வியாபாரி போல் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்திய பாதுகாப்புப் படையினரும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய விசேட புலனாய்வு நடவடிக்கையின் பின்னர், இந்த […]

ஆசியா

ஜப்பானில் உணவகத்தில் தண்ணீர் குடித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • September 22, 2023
  • 0 Comments

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள உணவகத்துக்குச் சென்ற கொரிய பெண்ணுக்கு பிளீச் (bleach) கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவத்தை விசாரிக்கும்படி ஜப்பானைத் தென்கொரிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்மாதம் 6ஆம் திகதி சம்பவம் குறித்து காங் எனும் அந்தப் பெண், தோக்கியோவில் இருக்கும் கொரியத் தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். காங்கும் ஜப்பானியரான அவரது கணவரும் தோக்கியோவில் இருக்கும் உயர்தர உணவகத்துக்குச் சென்றிருந்தனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் தரப்பட்டது. அதைக் குடித்த காங், நீரிலிருந்து விசித்திரமான […]

பொழுதுபோக்கு

“ஆடையை இன்னும் மேல தூக்கு.. ” தெறித்து ஓடிய சீரியல் நடிகை

  • September 22, 2023
  • 0 Comments

சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளும் தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் பற்றி யூடியூப் பேட்டிகளில் ஓப்பனாக பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பன் தான் சினிமாவில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து பேசி உள்ளார். வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா மாரியப்பன். இவர் சீரியல் தவிர சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அந்த வகையில், சசிகுமாரின் நாடோடிகள், […]

ஐரோப்பா

இத்தாலி நோக்கி சென்ற விமானம் – நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு

  • September 22, 2023
  • 0 Comments

United Airlines விமானம் 8 நிமிடங்களில் 28,000 அடி (8,534 மீட்டர்) உயரம் இறங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey) மாநிலத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் காற்றழுத்தப் பிரச்சினை ஏற்பட்டது. அது இத்தாலியின் ரோம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 37,000 அடி உயரத்தில் பறந்த விமானம், 8 நிமிடங்களில் 9,000 அடிக்கும் குறைவான உயரத்துக்கு இறங்கியது. காற்று அழுத்தத்தில் பிரச்சினை ஏற்படும்போது விமானம் விரைவாகத் தரையிறக்கப்படும். அது மீண்டும் நியூ ஜெர்ஸி விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாக […]

இலங்கை

வவுனியா இரட்டை படுகொலை விவகாரம் : ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

  • September 22, 2023
  • 0 Comments

வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் எரிக்காயங்களுக்கு உள்ளான பெண் ஒருவர் குற்றவாளியை அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்திருந்த நிலையில், நேற்று (21.09) அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளாதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள மூவருக்கு பகிரங்க பிடியாணை […]

இலங்கை

யாழில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை!

  • September 22, 2023
  • 0 Comments

யாழில் பழுதான மற்றும் காலவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக 06 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த 06 பேருக்கு எதிராகவும் நீதிமன்றம் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்ப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழ். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள குளிர்பான உற்பத்தி நிலையம் ஒன்றில் காலாவதியான ஜுஸ் பக்கட்டுகள் […]

வாழ்வியல்

மன அழுத்தத்தில் இருந்து மீள உங்களுக்கான தீர்வு…!

  • September 22, 2023
  • 0 Comments

மன அழுத்தம் என்பது ஒரு இயற்கையான மனித உணர்ச்சி. இந்த நீண்ட நாட்களுக்கு நீடித்தால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், உணர்ச்சி மற்றும் நடத்தை தொடர்பானவையாக இருக்கும். உடல் ரீதியாக தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, தசை வலி மற்றும் தூக்க பிரச்சினைகள் ஆகியவை ஏற்படும். உணர்ச்சி ரீதியாக கோபம், சோகம், பயம், கவலை மற்றும் அமைதியின்மை ஆகியவை ஏற்படும். ஆணைகளை பொறுத்தவரையில், மன அழுத்தம் அதிகமாகும் […]

ஆசியா

சிங்கப்பூரில் சண்டையை விலக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

  • September 22, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் நபரின் இடது கை ஆள்காட்டி விரல் நுனியைக் கடித்த நபருக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயது நிரம்பிய இந்தியாவைச் சேர்ந்த தங்கராசு ரெங்கசாமி தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்தபோது அவர் மண் தோண்டும் இயந்திர வாகனத்தை இயக்குபவராகப் பணிபுரிந்தார். காக்கி புக்கித்தில் உள்ள தங்கும் விடுதியில் வெளிநாட்டு ஊழியராக வசித்துவந்தார். இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று, தங்கராசு அவருடைய நண்பர் ராமமூர்த்தியோடு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது போதையில் இருந்த தங்கராசு […]

செய்தி

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரம்!

  • September 22, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 44 பேர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு பிரயோகங்களில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பழிவாங்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.  

error: Content is protected !!