தமிழ்நாடு

அதிமுக தலைவர்கள் டெல்லி வந்ததை பிறர்சொல்லியே கேள்விப்பட்டேன் – வானதி சீனிவாசன்

  • September 23, 2023
  • 0 Comments

டெல்லிக்கு வந்து அதிமுக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை பிறர் சொல்லியே கேள்விப்பட்டதாக பாரதியார் ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் தனக்கு சில மீடியாக்கள் அழைத்து கேட்டதாகவும் தான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தி வெளியிட்டிருக்கின்றனர் என்றும் கூறினார். மேலும் நேற்று மாலை முழுவதும் கட்சி பணிகளில் இருந்ததாகவும், தொலைக்காட்சி செய்தியை பார்த்து தான் அதிமுக தலைவர்கள் டெல்லி வந்து […]

இலங்கை

சிறையில் இருந்து தப்பிச்சென்ற இரு கைதிகள்!

  • September 23, 2023
  • 0 Comments

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ மற்றும் களனி, வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 6 மாத குழந்தையை கடித்துகுதறிய எலிகள்!- பெற்றோர் கைது

  • September 23, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 6 மாத குழந்தையை எலிகள் கடித்துகுதறிய சம்பவத்தில் குழந்தையின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி. இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் […]

பொழுதுபோக்கு

இணையத்தை தெறிக்கவிடும் சந்திரமுகி 2 படத்தின் புதிய ட்ரெயிலர்

  • September 23, 2023
  • 0 Comments

நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. இந்தப் படம் முன்னதாக கடந்த வாரத்திலேயே வெளியாகவிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. முன்னதாக ரஜினி, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் சந்திரமுகி 2 படமும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையை குறிவைத்து தாக்குதல்!

  • September 23, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் பிரதான மௌல்ஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. பிரித்தானியா  மற்றும் பிரான்ஸ் வழங்கிய Storm Shadow ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

‘லியோ’ சிறப்புக் காட்சியை பார்த்த உடன் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

  • September 23, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விஜய் இப்படத்தை தனி ஸ்கீரினில் பார்த்ததாக கூறப்படுகிறது. கிளைமாக்ஸ் உட்பட இதுவரை எடிட் செய்யப்பட்ட ‘லியோ’ […]

இந்தியா

பெங்களூரில் மன உளைச்சல் காரணமாக கல்லூரி மாணவி எடுத்த விபதீர முடிவு..!

  • September 23, 2023
  • 0 Comments

பெங்களூருவில் 13வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நாகரபாவி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (17). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 2 வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு, விஜயலட்சுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். பின்பு, வீட்டில் உள்ளவர்கள் அவரை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

X செயலியின் இந்திய மற்றும் தெற்காசியாவுக்கான கொள்கைப் பரப்பு பதவியில் இருந்து சமிரன் குப்தா விலகல்!

  • September 23, 2023
  • 0 Comments

சமூக ஊடக தளமான X இன் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான கொள்கைத் தலைவர் சமிரன் குப்தா ராஜினாமா செய்துள்ளார், குப்தா X இன் மிக மூத்த இந்தியப் பணியாளராக இருந்தார், மேலும் “முக்கிய உள்ளடக்கம் தொடர்பான கொள்கை சிக்கல்கள்” மற்றும் “புதிய கொள்கை மேம்பாடுகள் மற்றும் உள்நாட்டில் விற்பனை நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் X நிலையைப் பாதுகாத்தல்” ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். . X-ல் குப்தாவின் பதவிக்காலம் செப்டம்பரில் முடிவடைந்தது, அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் “எலான் […]

பொழுதுபோக்கு

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ பரபரப்பான அப்டேட்டை வெளியிட்டார் ஜி.வி.பிரகாஷ்!

  • September 23, 2023
  • 0 Comments

தனுஷ் தலைசிறந்த தமிழ் நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பன்முகத் திறமை கொண்ட இவர் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். தனுஷின் அடுத்த வெளியீடாக இருக்கும் பிரம்மாண்ட போர் ஆக்‌ஷன் படமான ‘கேப்டன் மில்லர்’.. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்று, ‘கேப்டன் மில்லர்’ பாடலின் சூடான அதிகாரப்பூர்வ புதுப்பிப்பைப் பகிர்ந்துகொண்டார் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார். கபேர் வாசுகி எழுதிய திரைப்படத்தின் […]

இலங்கை

இலங்கையில் இம்மாதத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

இலங்கையில் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 2000 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, செப்டம்பர் மாதத்தில் 2003 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முன்னைய மாதங்களை விட அந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என சுகாதார திணைக்களம் கணித்திருந்தது. இருப்பினும்  இந்த  மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. […]

error: Content is protected !!