ஐரோப்பா

இத்தாலியில் குவிந்த 10 ஆயிரம் அகதிகள் – ஜெர்மனியின் முடிவால் கடும் கோபத்தில் மக்கள்

  • September 24, 2023
  • 0 Comments

இத்தாலியில் குவிந்த 10 ஆயிரம் அகதிகள் தொடர்பில் ஜெர்மனி நாடு குறித்த அகதிகளை உள்வாங்குவது தொடர்பாக ஜெர்மனிக்குள் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது. கடந்த வாரம் இத்தாலியில் லம்புடசான் என்ற தீவுக்கு மத்திய தரை கடல் பகுதியின் ஊடாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்பிரிக்க மற்றும் அராபிய அதிகள் வந்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த அகதிகளுடைய விடயத்தில் அந்த நாட்டினுடைய அரசாங்கமானது ஜெர்மனியர்களை குற்றம் சாட்டி இருக்கின்றது. அதாவது ஜெர்மனியின் சில மீட்பு நிறுவனங்கள் இவ்வாறாக மத்திய தரை கடல் […]

ஐரோப்பா

மத்தியதரைக் கடல் குடியேறிகளின் கல்லறையாக மாறியுள்ளது – பாப்பரசர் வேதனை

  • September 24, 2023
  • 0 Comments

கடலில் மூழ்கும் மக்கள் கண்டிப்பாகக் காப்பாற்றப்பட வேண்டும்” என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் புகலிடம் தேடிக் கடல் கடந்துவருகின்றவர்கள் விடயத்தில் “மனிதத்தை” மதிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். “மோதல்கள், வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஆகியவற்றிலிருந்து தப்பி வெளியேறுவோர் , ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான தங்களது தேடல் அடியோடு நிராகரிக்கப்படுவதை மத்தியதரைக் கடலில் காண்கிறார்கள்,” “இந்த அற்புதமான கடல் ஒரு மகத்தான கல்லறையாக மாறியுள்ளது. அங்கு பல சகோதர சகோதரிகள் நல்லடக்கத்துக்கான உரிமை கூட […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கப்பலை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • September 24, 2023
  • 0 Comments

மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் 200 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 80 மில்லியன் டொலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொக்கைன் கையிருப்பு கப்பலின் மேலோட்டத்தில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன்படி அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நீருக்கடியில் இயக்கக்கூடிய கருவியைப் பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணையின் போது இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் இருந்து நியூசிலாந்து வழியாக மெல்போர்ன் வந்தடைந்த கப்பல் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் பெர்த் […]

ஆசியா

பிலிப்பீன்ஸில் பணத்தைத் திருடி, விழுங்கிய விமான நிலைய அதிகாரியால் அதிர்ச்சி

  • September 24, 2023
  • 0 Comments

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் பயண உடைமைச் சோதனை அதிகாரி ஒருவர், பயணி ஒருவரின் பணப்பையில் இருந்து 300 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பணத்தைத் திருடியுள்ளார். பின்னர் அவர் அதனை வாய்க்குள் போட்டு விழுங்கியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த காணொளி வெளியானதை அடுத்து, அப்பெண் அதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் பயணி ஒருவர் 300 டொலர் மதிப்புள்ள பணத்தைத் தொலைத்துவிட்டதாகச் சோதனைச்சாவடி […]

ஆசியா

சிங்கப்பூரில் தீவிரமடையும் காதல் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

  • September 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான சந்தேகத்தில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் காதல் மோசடிகளிலும் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டதால் குறைந்தபட்சம் 115,000 சிங்கப்பூர் டொலர் பண இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலிடம் இருந்து மின்னணு சாதனங்களை பொலிஸார் கைப்பற்றினர். அதோடு சேர்த்து 80,600 […]

இலங்கை

‘நிபா’ வைரஸ் இலங்கைக்குள் ஊடுருவுவதை தடுக்க தீவிர முயற்சி

  • September 24, 2023
  • 0 Comments

‘நிபா’ வைரஸ் இலங்கைக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்காக முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. , சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “நிபா வைரஸ் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் நான் அவதானித்ததுடன், இந்த விடயம் தொடர்பாக மருத்துவ ஆய்வு நிறுவன அதிகாரிகளால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னேற்பாட்டு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூபில் அறிமுகப்படுத்தவுள்ள சிறப்பு அம்சம் – பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

  • September 24, 2023
  • 0 Comments

யூடியூப் சமீபத்தில் அவர்களின் தளத்தில் யார் வேண்டுமானாலும் கன்டென்ட் பதிவிடும் வகையில் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகம் செய்தது. இந்த கருவிகளைப் பயன்படுத்தி வீடியோக்களை எளிதாக எடிட் செய்து யூடியூபில் பதிவேற்றலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் அதிகமாக முதலீடு செய்து அதன் பல தயாரிப்புகளை கூகுளின் செயலிகளோடு ஒருங்கிணைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து ‘யூடியூப் கிரியேட்’ எனப்படும் புதிய செயலி மற்றும் ஏஐ அம்சங்கள் பொருந்திய கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. […]

ஆசியா

ஜப்பானில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அருகில் நின்ற நால்வர் மரணம் – வெளிவரும் காரணம்

  • September 24, 2023
  • 0 Comments

ஜப்பானில் கரியமில வாயுவை நுகர்ந்து குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர். சவப்பெட்டிகளில் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் காய்ந்த பனிக்கட்டியிலிருந்து (டிரை ஐஸ்) வெளியான கரியமில வாயுவை நுகர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருந்த சவப்பெட்டிகளுக்கு மிக அருகே அதிக நேரம் நின்றதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 40லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர்களாகும். அவோமி, ஒக்கினாவா நகரங்களில் உள்ள வீடுகள், மியாகி, மியாஸாக்கி நகரங்களில் இருக்கும் இறுதிச் சடங்கு நிலையங்கள் ஆகியவற்றில் 2018லிருந்து 2021ஆம் ஆண்டுக்கு […]

இலங்கை

மலேசியாவில் இலங்கை பிரஜைகள் மூவர் கொலை – அடுக்கி வைக்கப்பட்டிருந்த சடலங்கள்

  • September 24, 2023
  • 0 Comments

மலேசியாவில் இலங்கை பிரஜைகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இலங்கையர் இருவரை தேடிவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். செந்துலில் உள்ள பெரெஹென்டயன் வீதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் வீடொன்றில் தங்கியிருந்தனர் அதன் பின்னரே அந்த வீட்டில் கொலைகள் இடம்பெற்றன என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த தம்பதியினர் தங்கியிருந்த வீட்டில் மூன்று உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இருவரும் அந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ஜோ பைடன்

  • September 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் புதியதோர் அலுவலகத்தை அமைத்துள்ளார். அதனைத் துணையதிபர் கமலா ஹாரிஸ் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டங்களை அலுவலகம் இயற்றும் எனவும் புதிய அலுவலகத்துக்குக் குறிப்பிட்ட அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அமெரிக்காவில் துப்பாக்கியை ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தும் சூழல் எட்டப்படவில்லை. வெள்ளை மாளிகையால் துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நிலைமையை மேம்படுத்த நாடாளுமன்றம் தகுந்த முடிவெடுக்கவேண்டும். இரண்டாம் தவணைக்குப் போட்டியிடும் பைடனின் தேர்தல் பிரசாரத்தில் […]

error: Content is protected !!