கிழக்கு மாகாண ஆளுநரிடம் சாணக்கியன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (24) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் இவர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து […]













