இலங்கை

சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்த பொருட்களை ஏலத்தில் விற்க நடவடிக்கை!

  • September 25, 2023
  • 0 Comments

சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையம் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏலம் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஒருகொடவத்த பகுதியில் உள்ள சுங்க முனையத்திற்கு களவிஜயம் செய்த அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி இதுவரை 15 ஆயிரத்து 765 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்இ இதனால் அரசுக்கு 14 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் […]

ஐரோப்பா

அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் புறக்கணிக்கப்பட்ட கறுப்பின சிறுமி…(வீடியோ)

  • September 25, 2023
  • 0 Comments

அயர்லாந்துக் குடியரசில், ஆயிரக்கணக்கானோர் முன் ஒரு கருப்பினச் சிறுமி புறக்கணிக்கப்படும் காட்சி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அயர்லாந்தில் நடைபெற்ற தடகளப்போட்டிகளின்போது, வெற்றி பெற்ற ஒரு அணிக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.அப்போது, வரிசையாக அந்த அணியிலுள்ள சிறுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்துவந்த அலுவலர் ஒருவர், வரிசையில் நின்ற ஒரு கருப்பினச் சிறுமிக்கு மட்டும் பதக்கம் அணிவிக்கவில்லை.அந்த கருப்பினச் சிறுமியைத் தாண்டிச் சென்று, அவளுக்கு அடுத்து நிற்கும் வெள்ளையினச் சிறுமிக்கு பதக்கம் அணிவிக்கிறார் அந்தப் பெண் அலுவலர். […]

இலங்கை

முத்துப்பந்திய கடற்கரையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்!

  • September 25, 2023
  • 0 Comments

முத்துப்பந்திய கடற்கரையில் சிசுவொன்றின் சடலம் நேற்றைய தினம் (24) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலமானது, பிறந்து ஒரு நாளான சிசுவுடையதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். முத்துப்பந்திய கடற்கரையில் இனந்தெரியாத இந்த சிசுவின் சடலத்தை மீனவர் ஒருவர் பார்த்து பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிலாபம் தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக […]

இலங்கை

20 ரயில் இன்ஜின்களை இலங்கைக்கு வழங்கும் இந்தியா!

  • September 25, 2023
  • 0 Comments

ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில், சேவையில் இருந்து நீக்கப்பட்ட என்ஜின்களை இலங்கைக்கு வழங்குவதற்கு  இணக்கம் தெரிவித்துள்ளதாக ரயில்வே  திணைக்களம்  கூறியுள்ளது. மேலும், இந்த ரயில் என்ஜின்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றதா என்பதை கண்டறிய தொழில்நுட்பக் குழுவொன்றை எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இந்த இன்ஜின்கள் நாட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு […]

பொழுதுபோக்கு

“திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்” குறித்து மனம் திறந்த அதுல்யா ரவி

  • September 25, 2023
  • 0 Comments

திருமணத்திற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதில் தவறு இல்லை என நடிகை அதுல்யா ரவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முதல் படத்திலேயே பேமஸான அதுல்யா ரவி, ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்தார். மீட்டர் என்கிற படத்தின் மூலம் டோலிவுட் பக்கம் சென்ற அதுல்யா ரவி தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக டீசல் என்கிற படத்தில் நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது […]

ஐரோப்பா

ரஷ்ய- வடகொரியா ஒப்பந்தம் – வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் வடகொரியா பயணம்

  • September 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, வருகிற அக்டோபரில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய இருக்கிறேன். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-அன் சந்திப்புக்கு பின்னான தொடர் […]

இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நில அபகரிப்பு நிகழ்வுகள் – ஸ்ரீ பிரசாத் கண்டனம்

  • September 25, 2023
  • 0 Comments

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் முஸ்லீம் மக்ககளுக்கு சொந்தமான வயல் நிலங்கள் பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பாவி பொதுமக்கள் புத்த பிக்கு தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ், முஸ்லீம், மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை அமைப்பாளர் ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றது. விகாரைகள் என்ற பெயரில் தமிழ் முஸ்லீம் மக்களின் வரலாற்றை மாற்றியமைக்கும் […]

ஆசியா

தென் சீனக் கடல் பகுதியில் அதிகரித்துள்ள பதற்றம்!

  • September 25, 2023
  • 0 Comments

தென் சீனக் கடலில் “மிதக்கும் தடுப்பு” அமைப்பது தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சீன கடலோர காவல்படை “மிதக்கும் தடையை” நிறுவியுள்ளது.  இதனால் பிலிப்பைன்ஸ் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலையை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் சீனக் கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே மோதல்கள் நிலவி வந்த நிலையில் இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ளது. Bajo de Masinloc பகுதி மீன்களுக்கு பெயர் பெற்றது. இப்பகுதியில் […]

பொழுதுபோக்கு

மாரிமுத்துவுக்கு பதிலாக வரப்போவது யார்? எதிர்பார்ப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் ரசிகர்கள்

  • September 25, 2023
  • 0 Comments

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு, சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வெள்ளை வேட்டி அணிந்த ஒருவர் காரில் இருந்து இறங்கி நடந்து செல்வது போன்ற காட்சிகளுடன் சீரியல் முடிந்தது. அப்படியானால் குணசேகரனா? அல்லது அவரது சகோதரரா? அப்படியானால், அந்த கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்கள்? என பல்வேறு கேள்விகள் குவிந்து வருகின்றன. பொதுவாக ஒரு சீரியலில் நடிக்கும் ஒருவர் […]

இலங்கை

கொக்கைன் போதைப்பொருளுடன் கென்ய பிரஜை கைது!

  • September 25, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கைன் (Cocaine)  போதைப்பொருளுடன் கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பிரஜை, 04 கிலோ கிராம் Cocaine போதைப்பொருளை  கொண்டுவந்திருந்தாக கூறப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 300 மில்லியன் ரூபா என சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேலும் […]

error: Content is protected !!