தளபதி 68 அப்டேட்டுக்காக காத்திருப்பவரா நீங்கள்?? வெளியானது சூப்பர் தகவல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 68 படத்தின் பூஜை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜய் நடித்து முடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ள லியோ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே ட்ரெய்லரும் ரிலீஸாகலாம் என்றும் கூறப்படுகின்றது. லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. […]













