இலங்கை

IMF உடனான பேச்சுவார்த்தை நிறைவு : 02ஆம் கட்ட கடனை பெறுவதில் சிக்கல்!

  • September 27, 2023
  • 0 Comments

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், இது குறித்து ஐ.எம்.எஃப் பிரதிநிதிகள் இன்று (27.09) சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது   தூதுக்குழுவின் தலைவர்  பீட்டர் ப்ரூவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,  நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவலியுறுத்தினார். குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு […]

இலங்கை

கம்பஹா மாவட்டத்தில் பெருமளவு சிறார்களுக்கு தீவிர மந்த போசணை

  • September 27, 2023
  • 0 Comments

அதி தீவிர மந்த போஷணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாக கம்பஹா மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் கம்பஹா மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 1439 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 320 சிறுவர்கள் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் கொழும்பின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் மந்த போசணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பிரதேச சுகாதார […]

ஐரோப்பா

திருமணத்திற்காக மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

  • September 27, 2023
  • 0 Comments

இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் மார்பகத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார். அலெசியா நெபோஸோ (21) எனும் இத்தாலியைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர், தனது நீண்ட நாள் காதலரான மரியோ லுச்சேசியை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தனது மார்பகங்கள் சிறிதாக இருப்பதாக எண்ணி கவலையுற்றுள்ளார். மேலும், திருமணத்தன்று Low-cut திருமண உடையில் தோன்ற வேண்டும் என்பது அலெசியாவின் விருப்பமாக இருந்துள்ளது. இதனால் அவர் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். […]

இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர்- எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

  • September 27, 2023
  • 0 Comments

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார். கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்த நியமனங்கள் வழங்கப்படாத […]

ஐரோப்பா

இத்தாலியில் எரிமலைக் களத்திற்கு அருகில் நிலநடுக்கம்!

  • September 27, 2023
  • 0 Comments

இத்தாலியின் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள எரிமலைக் களத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நிலநடுக்கமானது இன்று (27.09) உணரப்பட்டுள்ளது. இது கடந்த நான்கு தசாப்தங்களில் மிகப்பெரியது எனவும், ஆனால் இது எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இத்தாலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். Phlegraean ஃபீல்ட்ஸ் என்பது நேபிள்ஸின் மேற்கு புறநகரில் உள்ள எரிமலைப் பள்ளங்களின் ஒரு பகுதியாகும். இது பூகம்பங்கள் அல்லது எரிமலை வெடிப்புகளின் அபாயத்திற்காக தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது.

இலங்கை

இலங்கையில் 8 பேருக்கு மரண தண்டனை : 20 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணை

  • September 27, 2023
  • 0 Comments

கடந்த 2003 ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன குறித்த மரண தண்டனையை விதித்துள்ளார். இவ்வாறு கொல்லப்பட்ட நபர் களுத்துறை தெற்கு கலில் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர். குறித்த 8 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். சுமார் […]

இலங்கை

கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட ரயில் : தண்டவாளத்தை சீரமைப்பதில் இழுப்பறி!

  • September 27, 2023
  • 0 Comments

கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயில் தடம் புரண்ட நிலையில், சேதமடைந்த தண்டவாளத்தை இன்று (27.09) சரிசெய்ய முடியாது என   ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் தடம் புரண்டதன் காரணமாக 1000க்கும் மேற்பட்ட கான்கிரீட் ஸ்லீப்பர்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சேதமடைந்த அனைத்து ஸ்லீப்பர்களையும் மாற்ற வேண்டும் என்றும், இதை ஒரே நாளில் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது. எனவே, கடலோரக் கோட்டத்தில் ஒரே ஒரு வழித்தடம் மட்டுமே இயக்கப்படுவதால் பணிகள் தாமதமாகும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

வெளிநாட்டில் பார்ட்டி.. இணையத்தை கலக்கும் அனிதா விஜயகுமாரின் புகைப்படங்கள்

  • September 27, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளா கடந்த 2013-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தற்போது தனது மூத்த மனைவியான முத்துக்கண்ணு உடன் வாழ்ந்து வருகிறார் விஜயகுமார். விஜயகுமாருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். இதில் கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் ஆகியோர் விஜயகுமாரின் மூத்த மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்களாவர். அதேபோல் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த […]

இந்தியா

முதல்வரின்ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு பறந்த இதயம்: மூளைச்சாவு அடைந்த வாலிபர் உறுப்பு தானம்

  • September 27, 2023
  • 0 Comments

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலக்கலூரிப்பேட்டையைச் சேர்ந்தவர் கட்டா கிருஷ்ணா(18) குண்டூரில் நேற்று நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், கிருஷ்ணாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கிருஷ்ணாவின் கல்லீரல் விசாகப்பட்டினத்திற்கும், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இதேபோன்று இதயம் திருப்பதியில் உள்ள நோயாளிக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். சாலை மார்க்கமாக இதயம் […]

இலங்கை

இலுப்பைக்குளம் – தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள்

  • September 27, 2023
  • 0 Comments

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ள பகுதியில் இரகசியமான முறையில் இரவு வேளைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (25) இரவு சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை விதித்து தடையுத்தரவு […]

error: Content is protected !!