ஐரோப்பா

துருக்கிய குடிமக்கள் பயணித்த கப்பலை குறிவைத்து தாக்கிய ரஷ்யா!

  • December 14, 2025
  • 0 Comments

உக்ரைனின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில், ரஷ்யா வேண்டுமென்றே தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 11 துருக்கிய குடிமக்களுடன் பயணித்த  கப்பலொன்றை குறிவைத்து நேற்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக உக்ரைனிய இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த கப்பல் சூரிய காந்தி எண்ணெயை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் உக்ரைனின்  வான் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய  ரஷ்யா கடல்சார் சட்டங்களை மீறியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை கடந்த  வெள்ளிக்கிழமை துருக்கிக்குச் சொந்தமான மூன்று […]

ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலுக்கு திட்டம் – ஜெர்மனில் 05 பேர் கைது!

  • December 14, 2025
  • 0 Comments

பவேரியாவில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் 05 இஸ்லாமியர்களை ஜெர்மன் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22, 28 மற்றும் 30 வயதுடைய மூன்று மொராக்கோ நாட்டவர்கள், 56 வயதுடைய ஒரு எகிப்திய நாட்டவர் மற்றும் 37 வயதுடைய ஒரு சிரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையிலான சுபென் எல்லைக் கடவையில் வைத்து அவர்கள் கைது […]

உலகம் செய்தி

தாய்லாந்துடனான எல்லையை மூடும் கம்போடியா!

  • December 14, 2025
  • 0 Comments

அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் காரணமாக தாய்லாந்துடனான எல்லையை மூடுவதாக கம்போடியா நேற்று அறிவித்தது. முன்னதாக இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது. கம்போடியாவின் உள்துறை அமைச்சகம், மறு அறிவிப்பு வரும் வரை கடவைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலையிலும் தாய்லாந்து இராணுவம் ஜெட் விமானங்களை அனுப்பி தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் கம்போடியா  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து!

  • December 14, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் வடக்கிழக்கு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து  மோட்டார்  சைக்கிள்களில் வரும் இளைஞர்கள் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணிந்து மக்களை அச்சுறுத்தும் நபர்களுக்கு £100 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கும் நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இவ்வாறாக முகத்தை மூடி மறைக்கும் ஆடைகளை (balaclavas) அணியும் நபர்கள், கடந்த ஆறு மாதங்களாக குழந்தைகள் மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மின்சார பைக்குகள் மற்றும் குவாட் பைக்குகளில் நகரம் முழுவதும் அவர்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவில் ஊழல் -மறுசீரமைப்பு தேவை என வலியுறுத்தல்

  • December 14, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவில் ஊழல் -மறுசீரமைப்பு தேவை என வலியுறுத்தல் பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவு தொடர்பான ஊழலுக்குப் பின்னர், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேலை மற்றும் ஓய்வூதியத் துறையில் (DWP) முழுமையான மறுசீரமைப்பு தேவை என அரச ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் லிஸ் சேஸ் (Liz Sayce), , துறையின் நிர்வாகம் மற்றும் பணியாளர் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என எச்சரித்துள்ளார். துறையின் தவறுகள் காரணமாக, நூற்றுக்கணக்கான […]

உலகம்

(UPDATE) ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் உயிரிழப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் (Australia) புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல்தாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு தாக்குதல்தாரி காயம் அடைந்த நிலையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார். தொடர்புடைய செய்தி  ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் துப்பாக்கிச்சூடு – 16 பேர் வைத்தியசாலையில்!  

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் துப்பாக்கிச்சூடு – 16 பேர் வைத்தியசாலையில்!

  • December 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் (Australia) புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) ஆம்புலன்ஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். காம்பெல் பரேட் (Campbell Parade) என்ற பகுதியில் 50″ துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே பொதுமக்கள் குறித்த பகுதியை தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் […]

உலகம்

”கருப்பை இருந்தால் பெண், இல்லையென்றால் பெண் இல்லை” – மஸ்கின் கருத்தால் சர்ச்சை!

  • December 14, 2025
  • 0 Comments

உலக செல்வந்தரான எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “உனக்கு கருப்பை இருந்தால், நீ ஒரு பெண். இல்லையென்றால், நீ ஒரு பெண் அல்ல” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 30 மில்லியனுக்கும்  அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த பதிவுதொடர்பில் பலர் விமர்சித்து வருகின்றனர். பல பயனர்கள் மஸ்கின் கருத்தை ஆதரித்துள்ள அதேநேரம் ஏனையவர்கள் MRKH நோய்க்குறி அல்லது கருப்பை நீக்கம் போன்ற மருத்துவ நிலைமைகள் மற்றும் திருநங்கை […]

இலங்கை

முகாம்களில் தங்கியுள்ள 7000 மக்களை 03 மாதங்களில் மீள் குடியேற்ற தீர்மானம்!

  • December 14, 2025
  • 0 Comments

இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 7000 மக்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை புனரமைப்பது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 6,138 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்றும் கூறினார். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) […]

உலகம்

இயந்திரக் கோளாறு : புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்கிய விமானம்!

  • December 14, 2025
  • 0 Comments

வொஷிங்டன் (Washington), டி.சி.யில் இருந்து டோக்கியோவிற்குச் (Tokyo)  சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்  புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டல்லஸ் (Dulles) சர்வதேச விமான நிலையத்திற்கு  திருப்பிவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. போயிங் 777-200 விமானத்தில் இயந்திர சக்தி செயலிழந்ததன் காரணமாக மேற்படி விமானம் திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் சிறிய அளவில் தீவிபத்துக்குள்ளானதாகவும்   அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 275 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குப் […]

error: Content is protected !!