உலகம்

இந்தோனேசியாவில் பாரிய தீவிபத்து – நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து நாசம்!

  • December 16, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் (Jakarta) நேற்று ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து நாசமாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கயிறுகளை விற்கும் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய கடைகளுக்கும் பரவியதாக குறிப்பிடப்படுகிறது. பத்தொன்பது தீயணைப்பு இயந்திரங்களும் 80 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரம் போராடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தீவிபத்தினால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மின் ஷார்ட் […]

ஐரோப்பா செய்தி

போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த சலுகைகளையும் வழங்கமாட்டோம் – ரஷ்யா உறுதி!

  • December 16, 2025
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா எந்த பிரதேச சலுகைகளையும் வழங்காது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா தற்போது கைபற்றியுள்ள டான்பாஸ் (Donbas), கிரிமியா (Crimea), நோவோரோசியா (Novorossiya) ஆகிய பகுதிகளை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergei Ryabkov) குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வொஷிங்டன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் […]

உலகம்

குடியேற்ற வழக்குகளை விசாரணை செய்ய FBI முகவர்களை நியமித்த ட்ரம்ப்!

  • December 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் குடியேற்ற வழக்குகளை விசாரணை செய்வதற்காக ட்ரம்ப் நிர்வாகம் மீளவும் ஆயிரக்கணக்கான FBI முகவர்களை நியமித்துள்ளது. இந்நடவடிக்கையானது FBI முகவர்களை வழக்கான பணிகளில் இருந்து திசைத் திரும்பும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், FBI சுமார் 1,500 முகவர்களை வொஷிங்டன், D.C.க்கு வெளியே இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பணியகத்தின் மிகவும் பொதுவான குற்ற எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்புப் பணிகளை விட, குடியேற்றம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய ஏறக்குறைய 40 […]

அரசியல் இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவிப்பு: சர்வதேச உதவி குறித்தும் விளக்கம்!

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் வெளிப்படைத்தன்மையுடனேயே கையாளப்பட்டுவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க நிர்வாகப் பொறிமுறை ஊடாக உரிய வகையில் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லை என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடரின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. முதல் ஆறு மணி நேரத்துக்குள்ளேயே […]

உலகம் செய்தி

பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு – ஆயிரக்கணக்கானோர் தவிப்பு!

  • December 16, 2025
  • 0 Comments

பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு சாண்டா குரூஸ் (eastern Santa Cruz) பகுதியில் நிரம்பி வழியும் நதி பொலிவியால் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியாளர்கள் முன்னர் அணுக முடியாத இடங்களை தற்போது அணுக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடுமையான மழை காரணமாக   ஏராளமானோர்  காணாமல் போயுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்குமிடம் இல்லாமல் தவிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் ஹெலிகாப்டர் மூலம் […]

இலங்கை செய்தி

பேரிடர் தடுப்பு முகாமைத்துவம்: தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் பச்சைக்கொடி!

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரேமி லெம்பெர்ட், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இயற்கை அனர்த்தம் மற்றும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முக்கிய காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் தனது உறுதியான அர்ப்பணிப்பை தொடர்வதாக பிரான்ஸ் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். உடனடி […]

இலங்கை

மலைநாட்டில் அமைந்துள்ள பாடசாலை வளாகங்களில் சிறப்பு ஆய்வு நடவடிக்கை!

  • December 16, 2025
  • 0 Comments

டித்வா சூறாவளியை தொடர்ந்து மலையக பகுதிகளில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாப்பு பகுதிகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய  நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களின் நிலச்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தற்போது ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆய்வுகளுக்கு, பேராதனை, மொரட்டுவ மற்றும் […]

உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் இடிந்து விழுந்த இந்து ஆலயம் – புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

  • December 16, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் இந்து கோவில் ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர். டர்பனுக்கு (Durban) வடக்கே சுமார் 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் உள்ள வெருலமில் (Verula)  இந்த கோவில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கோவிலில் மேல் மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில், இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அங்கு பணியாற்றிய ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட […]

இலங்கை செய்தி

200 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை கையளித்தது பாகிஸ்தான்!

  • December 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர். பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார். பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 […]

error: Content is protected !!