ஜேசன் சஞ்சயின் ஹீரோவுக்கு பிறந்தநாள்… வெளியானது மாஸ் வீடியோ

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பா போல் ஹீரோவாக வருவார் என்ற எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக தனது கனவு பயணத்தை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அவரது முதல் படத்தையே பிரம்மாண்ட நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது.
மேலும் ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் சந்திப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதில் இயக்குனராக சஞ்சய் இடம்பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அப்பா விஜய் 8 பாய்ந்தால் மகன் சஞ்சய் 16 அடி பாய்வார் போல என்று பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் சஞ்சய்யின் தொடக்கம் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 22 times, 1 visits today)